எழுத்தாளர்: ராஜேஷ்குமார்
இன்கம்டாக்ஸ் ஆபிசர்கள் நித்திலனையும் சாதுர்யாவையும் இன்கம்டாக்ஸ் கமிஷனர் அருள் வரவழைத்து ஆபரேஷன் ஆக்டபஸ் பற்றி கூறுகிறார். தமிழ்நாட்டின் மாஜி முதலமைச்சர் முகில்வண்ணனுக்கு கள்ள நோட்டு விஷயத்தில் பெரிய பங்கு இருப்பதாக சொல்கிறார். முகில்வண்ணனின் அறுபதவாது பிறந்தநாள் விழாவில் கலந்துக்கொள்ள அழைப்பிதழைக் கொடுத்து வேவு பார்க்க அனுப்புகிறார்.
பண்ணை வீட்டில் நடக்கும் அந்த விழாவுக்கு இருவரும் புறப்படுகிறார்கள். வழியில் ஒரு பெண் அவர்கள் காரின் முன் விழ , முகில்வண்ணனின் ஆட்கள் தன்னைக் கொலை செய்ய முயற்சிப்பதாகவும் , காரில் ஒளிந்துக்கொள்ள அனுமதி கூறுகிறாள். தான் தன்னனுடன் வேலை செய்யும் இன்னொரு ஆணுடன் முகில்வண்ணனின் தீய காரியங்களை வேவு பார்க்க வந்ததாக சொல்கிறாள். தன்னைக் கண்டுபிடித்து விட்டதால் அவர்கள் துரத்துவதாக சொல்லவும் தேடிவந்த ஆட்கள் நெருங்கவே , நித்திலன் அந்த பெண்ணைக் காரில் ஒளிந்துக்கொள்ள சொல்கிறான்.

தேடிவந்த ஆட்கள் நித்திலனையும் சாதுர்யாவையும் நெருங்கி அந்த பெண்ணைப் பற்றி விசாரிக்க இருவரும் அப்படி யாரையும் பார்க்கவில்லை என சொல்கிறார்கள். அந்த ஆட்களில் ஒருவன் நம்ப மறுக்கவே , காரைச் சோதனை இடுகிறான். சாதுர்யா பயம் கலந்த பார்வையோடு பார்த்துக்கொண்டிருக்க காரில் யாரையும் காணாமல் அந்த கூலிப்படை வந்த திசையை நோக்கி நகர்கிறது. ஒளிந்திருந்த பெண் எங்கே போனால் என சாதுர்யா யோசித்துக் கொண்டிருக்க , அவள் அப்போதே காரின் மறுபக்கம் நகர்ந்து பஸ் ஏறி சென்றுவிட்டாள் என சிரித்தபடியே கூறுகிறான் நித்திலன்.
இருவரும் பண்ணை வீட்டை சென்றடைய , அங்கே கஜபதி என்பவர் நீங்கள் முத்துபாண்டியனின் மகன் மருமகள்தானே என கேட்க இருவரும் ஆமோதிக்கின்றனர். அவர் நேரே மாஜி முதலமைச்சர் முகில்வண்ணனிடம் அழைத்து செல்கிறார். அதே சமயம் , முத்துபாண்டியனும் முகில்வண்ணனிடம் பேச போன் செய்கிறார். நிஜத்தில் தன்னிடம் பகைமை பாராட்டிய முத்துபாண்டியனின் மகனும் மருமகளும் தான் வந்திருக்கிறார்கள் என நினைத்து பெருமைக்கொள்கிறார் முகில்வண்ணன். ஆனால் போனில் பேசிய முத்துபாண்டியன் நீங்கள் வருவதை பற்றி சொல்லவில்லையே என கேட்கவும் இருவரும் திணறுகிறார்கள்.
அப்போது முகில்வண்ணனின் மகன் செந்தமிழ் , முத்துபாண்டியன் சொல்ல மறந்திருப்பார் என எடுத்துகொடுக்கவும் நிம்மதி பெருமூச்சு விடுகின்றான் நித்திலன். முதலமைச்சரை வரவேற்க முகில்வண்ணன் வாசலுக்கு செல்ல நிஜத்தில் நித்திலனும் சாதுர்யாவும் இன்கம்டாக்ஸ் ஆபிசர்கள் என்பது தனக்கு தெரியும் என முகில்வண்ணனின் ஆள் கஜபதி சொல்ல , வியர்வையில் குளிக்கிறார்கள் இருவரும்! இதற்கிடையில் அதே பண்ணை வீட்டில் முகில்வண்ணன் மருமகன் மணிமார்பன் சரமாரியாக வெட்டப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறான்.
ஃபைவ் ஸ்டார் துரோகம், சுட சுட ஒரு அரசியல் த்ரில்லேர்! |
