ராஜ்யம் ஒன்றை மாமன்னர் ஆண்டு வந்தார். செல்வமும் செழிப்பும் மிகுந்த அந்த ராஜ்யத்தில் கல்வியறிவு மிகுந்த ஆன்றோர்களும் சான்றோர்களும் அநேகம்.
ஒரு நாள் மன்னர் அவர்கள் அனைவரையும் ஒரு சேர அழைத்து புதிர் ஒன்றை விடுத்தார். அவர்களின் ஞானத்தைச் சோதிக்க விரும்புவதாகச் சொல்லி, பதில் செல்பவருக்கு பொன்னாலும் வைரத்தாலும் அலங்கரித்த ராஜ வாள் பரிசளிக்க படும் என சொன்னார்.
‘மாலை சூரியன் மறைவதற்குள், மன்னருக்கு ஒரு பரிசு அளிக்க வேண்டும். அந்த பரிசானது மன்னர் கவலையாக இருக்கும்போது மகிழ்ச்சி அளிக்கும்படியாகவும் இன்பத்தின் உச்சியில் இருக்கும்போது நிதானத்துக்கு வரும்படியாகவும் இருக்க வேண்டும்’ என்பதே அந்த புதிர்.
சூரியன் மறந்த பிறகு மன்னர் கல்விமான்களைத் தனது ராஜ சபைக்கு அழைத்தார்.
“என்ன சான்றோர் பெருமக்களே, என் பரிசு தயாரா?” என வினவினார்.
சொல்வதறியாமல் விழித்த அந்த கூட்டத்தின் மத்தியிலிருந்து ஒரு குரல் ஒலித்தது.
“தயார் மன்னவா!”.
குரல் வந்த திசையில் அனைத்து தலைகளும் திரும்ப, மந்திரிகளில் ஒருவர் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்தார். மன்னரை வணங்கி, தான் கொண்டு வந்த மோதிரத்தை அவரிடம் தந்தார்.
அதில் ‘இதுவும் கடந்து போகும்’ என பொறிக்கப்பட்டிருந்தது.
உச்சி குளிர்ந்த போன மன்னர், மிக பொறுத்தமான பதிலை தந்த மந்திரியிடம் அந்த ராஜ வாளைத் தந்தார்.
#சிந்தனைத் துளி
- வாழ்வில் இன்ப துன்பங்களிடையே உழன்றுக் கொண்டிருக்கிறீர்களா?
- வாழ்க்கையில் நிலையானது என்று எதுவுமே இல்லை. மாற்றம் ஒன்றுதான் மாற்றமில்லாது!
- இன்ப துன்ப தருணங்களைக் கடந்து எவ்வாறு முன்னோக்கி செல்வது?
- இதுவும் கடந்து போகும் 🙂
