எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன்
தன் மாமன் மகன் கிரிதரனின் வருகைக்காக ஏர்போர்ட்டில் காத்திருக்கிறாள் அகிலா. காதல் சொட்ட சொட்ட போனில் பேசியவன் அருகில் ஒரு வெள்ளைக்கார பெண்ணுடன் வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறாள். அந்த பெண்மணியை லிண்டா என அறிமுகப்படுத்துகிறான் கிரிதரன்.
அவள் தனது தோழி எனவும் , இந்தியன் மித்களைப் பற்றி ஆராய்ந்து எழுத வந்திருப்பதாக சொல்வதை கேட்டு அகிலா அமைதி அடைகிறாள். லிண்டா தன்னை நாகராஜ போகர் எனும் கொள்ள அமெரிக்காவில் சந்தித்ததாகவும் சித்தரின் மகிமைகளைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள வெள்ளையங்கிரி மலைக்கு வரும்படி சொன்னதாகவும் கூறுகிறாள். சாட்சியாக இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைக் காட்டுகிறாள் லிண்டா.

அகிலாவின் தந்தை கார்த்திகேயன் போட்டோவைப் பார்க்க திகைப்புக்குள்ளாகிறார். இந்த சித்தர் மகாசமாதி அடைந்து 3 வருடங்கள் ஆகிவிட்டதே என கூறவும், லிண்டா மறுக்கிறாள். அவர் தன்னை வந்து பார்த்தது நிஜம்! சாட்சியாக போட்டோவே உள்ளது என சொல்கிறாள்.
கார்த்திகேயன் நாகராஜ போகரை வணக்கும் நண்பர் வித்தியாசாகரைப் போனில் அழைத்து நாகராஜ போஜரைப் போலவே உருவம் கொண்ட வேறு யாராவது இருக்கிறார்களா என் விசாரிக்கிறார். வித்யாசாகர் அப்படி யாருமில்லை; நாகராஜ போகர் சமாதி அடைந்து 3 வருடங்கள் ஆகிவிட்டதே என சொல்கிறார். லிண்டா கிரிதர் மற்றும் கார்த்திகேயன் வெள்ளையங்கிரி மலைக்குப் புறப்படுகிறார்கள்.
இரண்டாவது தடத்தில் நடராஜன் எனவும் நெசவுத் தொழிலாளி பற்றிய கதை வருகிறது. அவனும் நாகராஜ போகருக்கு உணவளிக்க ஒரு பிச்சைக்கார சாமியோடு வெள்ளையங்கிரி புறப்படுகிறான். பஸ்சில் பல மணி நேரங்கள் பயணிக்கவேண்டிய இடத்துக்கு அந்த பிச்சைக்கார சாமியாரின் கையைப் பிடித்துக்கொண்டு சில நிமிடங்களிலே வெள்ளையங்கிரி மலை அடிவாரத்துக்கு வந்துவிடுகிறான்.
இந்த அதிசயம் எப்படி நடந்து என கேட்க சித்துகளின் மகிமைகளைப் பற்றியும் அந்த ஞானத்தை அடைய மனதை , நாக்கை அடக்கி உடம்பின் மூலம் ஆத்மாவை அடையாளம் காணவேண்டும் என போதிக்கிறார். நாகராஜ போகர் சமாதிக்கு முன்பு கொண்டு வந்த உணவை வைக்க அங்கே லிண்டாவும் வந்து சேர்கிறாள்.
- பல மாய சித்துகளைச் செய்யும் அந்த பிச்சைக்கார சாமியார் யார்?
- லிண்டா அமெரிக்காவில் சந்தித்தாக சொல்லப்படும் நாகராஜ போகர் மகாசமாதி அடைந்து விட்ட நிலையில் இது எப்படி சாத்தியம்?
அஷ்டமா சித்து எனப்படும் 8 வித சித்திகளில் இரண்டாம் சக்தியே மஹிமா! ஒரு புள்ளி அளவுள்ள விதை தான் ராட்சத அளவில் மரமாகிறது. இந்த சக்தியைப் பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள இரண்டாம் சக்தி எனும் நாவலை கண்டிப்பாக வாங்கி படிங்க!