எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன்

ரம்யாவுக்கு காடு என்றாலே பயம் தொற்றிக்கொள்ளும். வீட்டில் மாப்பிளை பார்க்க தனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை விவேக்கைக் கண்டவுடன் காதல் கொள்கிறாள். ஆனால் விவேக்கோ ஒரு போரெஸ்ட் ஆபிசர், காட்டிலே தங்கிருப்பவன். விவேக் செய்யும் வேலையைப் பற்றி தெரிய வரவே திருமணம் வேண்டாம் என மறுக்கிறாள் ரம்யா.
சிறிய அண்ணன் யுகேந்திரன் அவள் கல்யாணத்துக்கு மறுத்தால் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள் என மிரட்டுகிறான். விவேக் மீதுள்ள காதலால் மிரட்டலுக்கு பணிந்து கல்யாணம் செய்துக் கொள்கிறாள்.
ரம்யா விவேக்கிடம் தான் காட்டுக்கு வரமாட்டேன் என அடம் பிடிக்கிறாள். முதலில் குழம்பும் விவேக், பிறகு உண்மைகள் அனைத்தும் தெரிய வரவே, மனைவி தன் பிரிவை தாங்கமாட்டாள் என்பதை உணர்கிறான். அதனால் தேனிலவு செல்வதாகச் சொல்லி அவளைக் காட்டுக்கு அழைத்து செல்கிறான்.
தன்னிடம் பொய் சொல்லி காட்டுக்கு அழைத்து வந்துவிட்டான் என எண்ணி ரம்யா விவேக் மீது கோபம் கொள்கிறாள். ஒரு சமயத்தில் விவேக்கின் தலையில் ஆழமான காயம் பட மருத்துவர் வீட்டுக்கு காட்டைத் தாண்டி செல்ல வேண்டும் என நிர்பந்தம் ஏற்படுகிறது.
ரம்யா தன் பயத்தை மீறி காட்டுக்குள் தனியாக சென்று மருத்துவரை அழைத்து வருவாளா?
அச்சத்தை மீறி விவேக் மீதுள்ள காதல் வென்றதா என்பதே இளவேனிற் காலம்.
