எழுத்தாளர்: லட்சுமி சுதா
மானசா ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறாள். அந்த நிறுவனத்தின் முதலாளி அவளை விரும்புவதாக சொல்ல , அவளோ அவரை மறுக்கிறாள். மானசாவும் நிரஞ்சனும் காதலர்கள். ஆனால் நிரஞ்சனின் தாயார் இவர்கள் இருவரும் விரும்புவது தெரியவர, மானசாவை நேரில் சந்திக்கிறார்.
அவர்கள் திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை எனவும் நிரஞ்சனைப் பிரிந்து சென்றுவிடும்படி கூறுகிறார். மானசா வேறுவழில்லாமல் நிரஞ்சனின் தாயார் சொன்னதுபோல் , தனக்கு வேறொரு பணக்கார மாப்பிளை இருப்பதாக சொல்லி பிரிந்து சென்றுவிடுகிறாள்.
காலம் உருண்டோட , மானசாவின் தம்பி கடன் பிரச்சனையில் சிக்கிக்கொள்ள , அவள் நிரஞ்சனை மீண்டும் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. தம்பி பட்ட கடனுக்காக தான் காதலித்த டாக்டர் நிரஞ்சனின் ஹோட்டலில் பணிபுரிகிறாள். பழக்கமில்லாத வேலையில் மானசா சிரமப்பட, அவளைத் தன் குழந்தை சுஜிதாவை பார்த்துக்கொள்ள சொல்கிறான் நிரஞ்சன்.
நிரஞ்சன் மானசாவின் காதல் கை கூடியதா என்பதே உனக்காகவே நான்! |
