எழுத்தாளர்: ராஜேஷ்குமார்
நகரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கார்டியோலோஜிஸ்ட் அனந்த கிருஷ்ணன். ஏழை எளியவருக்கு பணம் கூட வாங்காமல் மருத்துவம் பார்க்கும் தங்கமான மனிதர். அவரின் மகன் ஹரேஷும் அனந்த கிருஷ்ணன் நடத்தும் அதே மருத்துவமனையில் கார்டியோலோஜிஸ்ட்டாக இருக்கிறான். மனைவியைக் காலேஜில் இறக்கிவிட்டு மருத்துவனை வருகிறார் அனந்த கிருஷ்ணன்.
கம்ப்யூட்டரில் தினசரி நடவடிக்கைகளை அனந்த கிருஷ்ணன் கவனித்து கொண்டிருக்க அதில் 8pm to 6am நீங்கள் இறக்க வேண்டிய நேரம் என எழுதியிருப்பதைக் கண்டு அதிர்ந்து போகிறார். தன் தனி அறைக்குள் தன்னை தவிர யாரும் வர வாய்ப்பில்லை மேலும் கம்ப்யூட்டரில் தன்னை தவிர யாரும் கையாள சாத்தியமில்லை என யோசித்து குழம்பி போகவே கிரிம் பிரென்ச் கோஷை வரவழைக்கிறார்.

வழக்கை விசாரிக்கும் கோஷ் அனந்த கிருஷ்ணனைச் சுற்றி Shadow Squad எப்போதும் இருப்பார்கள் அதனால் பயப்படவேண்டாம் என சொல்கிறார். பதட்டத்துடன் வீட்டுக்கு செல்லும் அனந்த கிருஷ்ணன் முகத்தில் மாறுதலை உணரும் மனைவியும் மகள் அள்ளியும் என்ன என விசாரிக்க அவர் ஒன்னும் இல்லை மறுத்துவிடுகிறார்.
அவர் பயந்தது போல் ஏதும் நடக்காமல் மறுநாள் பொழுது விடிகிறது. ஆனால் இன்று மரணம் நிச்சயம் நிகழும் என செய்தி வரவும் முதுகுத்தண்டில் மின்சாரம் பாய்ந்தது போல் ஆகிறார் அனந்த கிருஷ்ணன். Shadow Squad எப்பொதும் அவருக்கு துணையாக இருக்கிறது என ஆறுதல் சொல்கிறார் கிரிம் பிரென்ச் கோஷ். மனைவியும் மகளும் டெல்லி புறப்பட , ஏர்போர்ட் வரை தானும் வருவதாக சொல்கிறார் அனந்த கிருஷ்ணன்.
மனைவி , ஹரிஷ் மற்றும் அல்லி போர்டிகோவில் காத்திருக்க மூக்கு கண்ணாடி எடுத்து வருவதாக அறைக்குள் செல்கிறார். ஐந்து நிமிடங்கள் ஆகியும் வராததால் , அல்லி அப்பாவை தேடி உள்ளே செல்கிறாள். அங்கே டாக்டர் அனந்த கிருஷ்ணன் பிணமாக கிடைக்க இடி விழுந்ததைப்போல குடும்பமே ஆடிபோகிறது. கிரிம் பிரென்ச் கோஷ் நம் துப்பறியும் ஹீரோ விவேக்கிற்கு போன் செய்ய… இனி விவேக்கின் என்ட்ரி!
| திட்டமிட்டபடியே கார்டியோலோஜிஸ்ட் அனந்த கிருஷ்ணனைக் கொலை செய்தது யார்? அவர் கொலை செய்யப்பட்ட நோக்கம் என்ன?
விவேக்கின் சாகசத்தால் உண்மை வெளிவரும் போது அதிரிச்சிக்கு பஞ்சமிருக்காது. ஊமத்தம் பூக்கள் ராஜேஷ்குமார் மற்றொமொரு சாகசப் படைப்பு. |
