எழுத்தாளர்: ராஜேஷ்குமார்
இரயில் கிராசிங் கேட்டைக் கடக்க வேனில் வந்த இருவர், தன்னிடம் லஞ்சம் குடுக்க முயன்றதாக பாதுகாவலர் சுங்க அதிகாரிகளிடம் தகவல் கொடுக்கிறார். சுங்க சாவடியில் அந்த வேன், அதிகாரிகள் தடுத்தும் அவர்களைக் கடந்து வேகமாக சென்றுவிட, அதிகாரிகள் அந்த வேனைத் துரத்துகிறார்கள். போலீசுக்கும் தகவல் சொல்கிறார்கள்.
ஒரு சவுக்கு தோப்பில், வேனை நிறுத்திவிட்டு அந்த இருவரும் தப்பித்துவிட, வேனைத் திறந்து பார்க்கும் அதிகாரிகள் அதிர்ந்து போகிறார்கள். அதில் மூன்று குரங்குகள் இறந்துகிடக்கின்றன. கால்நடை மருத்துவரோ மூன்றில் ஒரு குரங்கு இன்னும் உயிரோடு இருப்பதாகவும், மூன்றுக்கும் நிஜ கண்கள் ஆபரேஷன் செய்து எடுக்கப்பட்டு, prosthethic கண்கள் பொறுத்தப்பட்டிருப்பதாக சொல்கிறார். இது கண்டிப்பாக சட்டத்துக்குப் புறம்பாக செய்யப்பட்டிருக்கும் ஆராய்ச்சி எனவும், இதன் பின்விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும் என எச்சரிக்கிறார்.
இந்த ஆராய்ச்சிகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள டாக்டர் சொன்ன பிரதாப் எனும் ஆராய்ச்சியாளரை இன்ஸ்பெக்டர் மகாதேவன் சந்திக்கிறார். இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது, வேனை ஓட்டிய ஜம்பு என்பவன் பிரதாப்புக்குப் போன் செய்கிறான். முகத்தில் சலனம் காட்டமல், பிரதாப் சமாளிக்கிறார். இன்ஸ்பெக்டர் வெளியேறிய பிறகு, கம்பனியின் எம்.டி சித்தார்த், பிரதாப்பைப் போனில் தொடர்பு கொண்டு இன்ஸ்பெக்டர் மகாதேவனிடம் கவனமாக இருக்க சொல்கிறார். மேலும் வேனை ஓட்டிய அந்த இருவரின் அவரச புத்தியால்தான் விசயம் போலீஸ் காதுக்குச் சென்றுவிட்டதால் , அவர்களைத் தூக்கில் தொங்கவிட்டதாக சொல்லி அந்த படத்தைப் பிரதாப்புக்கு அனுப்புகிறார் சித்தார்த்.
Research Scholar சபரியிடம் எப்படியாவது மூன்று மாதத்துக்குள் பயோனிக் புராஜக்டை முடித்து விடும்படி சித்தார்த் சொல்கிறார். சபரியும் அதற்கு தனக்கு ஆராய்ச்சி செய்ய மேலும் குரங்குகள் தேவைப்படுகிறது என சொல்லிவிட்டு வெளியில் செல்ல, அவனைத் துப்பாக்கி முனையில் சைதன்யா என்பவள் மிரட்டி , ஒரு தனி பங்களாவிற்கு அழைத்து செல்கிறாள். அங்கே சோங் லீ எனும் சீன நாட்டவன் , பயோனிக் புராஜக்ட்டின் விவரங்களைக் கேட்டு மிரட்டுகிறான். அவன் அசந்த சமயத்தில் துப்பாக்கியைச் சபரி பிடுங்க, அவர்களைத் துப்பாக்கி முனையில் மிரட்டும் போது, அவன் தோல் மீது ஒரு கை விழுகிறது.
திடுக்கிட்டு திரும்பும் சபரி அங்கே பிரதாப்பையும் சித்தார்த்தையும் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகிறான். அவனின் நேர்மையைச் சோதிக்கவே அப்படி செய்தாகவும் அவனது நேர்மையைப் பாராட்டி டைமண்ட் நெக்லஸைத் சித்தார்த் பரிசளிக்கிறார். அப்போது சபரியின் தொலைபேசி சினுங்க மனைவி அஜந்தா அவன் வீடு திரும்பாததைக் கேட்டு போனில் ஆத்திரமாக பேசுகிறாள். சபரி அவளை ஒருவழியாக சாமாளித்துவிட்டு போனை வைக்கும் போது “சவுகரியமான போச்சு” என ஒரு ஆணின் குரல் கேட்கவும் விக்கித்து போகிறான்.
தெரிந்துக்கொள்ள கடைசி தீக்குச்சி நாவலை கொஞ்சம் உரசிப்பாருங்கள்! |
