பக்கத்துக்கு வீட்டு பொன்னி அக்கா இருட்டில் எதையோ மும்முரமாக தேடிக்கொண்டிருந்தார்.
உதவும் எண்ணத்தில் அருகில் வந்த உமா, “அக்கா இந்த விளக்கு கம்பத்துக்கு கிட்ட என்ன தேடி கொண்டிருக்கீங்க”? என கேட்டாள்.
“சாவி தொலைஞ்சு போச்சு உமா” என பதட்டத்துடன் பதிலளித்தார் பொன்னி அக்கா.
“அடடே! சரி நானும் உங்ககூட சேர்ந்து தேடுறேன்” என உமா சொல்லவே இருவரும் சாவியைத் தேட தொடங்கினர்.
சிறிது நேரம் கழிந்தது. “சாவியை எங்கே அக்கா தொலைஞ்சிங்க”? என உமா கேட்டாள் தேடிக்கொண்டே.
“வீட்லதான்” என்றார் பொன்னி அக்கா.
“அட கடவுளே! வீட்ல தொலைச்ச சாவிய ஏன் இங்கே தேடிகிட்டு இருக்கீங்க?” என ஆச்சரியப்பட்டாள் உமா.
“ஏன்னா, இங்கதான் வெளிச்சமா இருக்கு” என்றார் பொன்னி அக்கா.
#சிந்தனை துளி
- உங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை தேட வேண்டிய இடத்தில் தேடாமல் உங்களுக்கு வசதியான இடங்களில் மட்டும் தேடுகிறீர்களா?
- தீர்வுகளைத் தேடுவதில் நீங்கள் காட்டும் ஆர்வம் சரியான அளவில் இருக்கிறதா?
