பாடசாலை ஒன்றில் மாணவர்கள் பலர் பயின்று வந்தனர். அவர்களுக்கு நீதிகளையும் தர்மங்களையும் குரு போதித்து வந்தார். ஒவ்வொரு நாளும் பாடத்தின் இறுதியின் போது, குரு மாணவர்களுக்குப் பல கதைகளைச் சொல்லி வந்தார்.
கதைகளைச் சொல்லும் குரு, கதைக்கான உள்ளர்த்தங்களை சொல்வதேயில்லை. இதை நினைத்து குமைந்துகொண்டிருந்த மாணவர்கள், ஒரு நாள் குருவிடமே கேட்டுவிட்டனர்.
அதற்கு குரு, “யாராவது அவர்கள் சுவைத்த மிச்ச பழத்தை நீங்கள் சாப்பிட கொடுக்க முன்வந்தால் , உங்களுக்கு எப்படி இருக்கும்?” என பதிலளித்தார்.
#சிந்தனை துளி
- பள்ளி பாடத்தில் சொல்லிக்கொடுத்தை அப்படியே நம்புகிறீர்களா? அல்லது அதையும் தாண்டி நீங்கள் யோசித்தது உண்டா?
- வாழ்கையை நீங்கள் அறிந்து, விளங்கிக்கொண்ட முறையில் நடத்துகிறீர்களா? அல்லது வெறுமனே மற்றவர்கள் சொன்ன வழியை பின்பற்றுகிறீர்களா?