எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர்
ராஜாத்திக்கு மாப்பிளை பார்த்திருந்தார்கள். மாப்பிள்ளைக்குப் பெண் பிடித்திருந்தாலும் சற்று பூசலான உடம்பிருந்த ராஜாத்தியை உடல் இளைக்க சொல்லிருந்தான். அவனின் மேல் நேசமும் அதே நேரம் ரோசமிக்க ராஜாதி கல்யாணத்திற்குள் ஐந்து கிலோ உடல் இடையைக் குறைத்து காண்பிப்பதாக சூளுரைத்திருந்தாள். அன்றும் கடற்கரைக்கு ஜாகிங் சென்றிருக்க முனகல் சத்தம் கேட்டு பார்த்தால் அங்கே கத்தியால் குத்தப்பட்டு ஒரு இளைஞன் ரத்த வெள்ளத்தில் கிடந்தான். அதே வேளையில் மோட்டார் சைக்கிளில் இன்னொருவன் செல்வத்தையும் பார்க்கிறாள்.
உதவிக்கு ஆட்களைத் தேடி செல்ல சரியான நேரத்தில் ஒரு டாக்டரும் அங்கே வந்து சேர்கிறார். இருவரும் அந்த இளைஞனை தூக்கிக்கொண்டு மருத்துவமனை விரைகிறார்கள். ஆனால் அவனோ சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போகிறான். இன்ஸ்பெக்டர் சித்ரவேல் வந்து விசாரிக்க நடந்ததைக் கூறுகிறாள் ராஜாத்தி. இறந்து போன இளைஞன் யார் என விசாரணை தொடர்கிறார் இன்ஸ்பெக்டர்.

இந்த நாவலில் கதை இரண்டு தடங்களில் பயணம் செய்கிறது. மற்றொரு கதை சினிமா நடிகை தேவமாலினியை நோக்கி நகர்கிறது. முப்பத்தைத் தாண்டி இருக்கும் அவளுக்கு பட வாய்ப்புகள் குறைந்திருக்கும் நேரம். தன்னை விட இரண்டு வயது குறைவான ஹீரோ இளங்கோவின் படத்தில் அவனுக்கு அக்காவாக நடிக்க வாய்ப்பு வரவும் அதை பற்றிக்கொள்கிறாள்.
தேவமாலினிக்கு எப்போதும் அவன் மீது ஒரு ஈர்ப்பு உண்டு. அவனுடன் பேசிக்கொள்ளும் சந்திப்பு கிடைக்க இருவருக்கும் தொடர்பு ஏற்படுகிறது. தன்னையே கொடுக்கும் அவளை திருமணம் செய்து கொள்வான் என நம்பிக்கையில் இருக்கிறாள் தேவமலினி. அதை தனக்கு நம்பிக்கை பூர்வமான நிருபர் மன்மதனிடம் சொல்கிறாள். இளங்கோவின் வீட்டில் ஒரு பிரஸ் மீட் சென்றிருந்த மன்மதன் மூலம் இளங்கோ பெற்றோர் பார்த்தப் பெண்ணைத் திருமணம் செய்துக் கொள்ள போகிறான் என தேவமாலினிக்கு தெரிய வருகிறது.
இந்த இரண்டு தடங்களும் இணையும் போது மர்ம முடிச்சுகள் நிச்சயம் அவிழும். தயங்காதே தப்பில்லை! – ஆச்சரியத்திற்கு அளவில்லை!
