எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன்
குடும்ப சூழ்நிலையின் பொருட்டு மொரிசியஸ் தீவில் வேலை செய்ய வருகிறாள் கதையின் நாயகி யமுனா. தன்னை அழைத்து போக வந்த சூர்ய பிரகாஷ்தான் எஸ்டேட்டின் முதலாளி என தெரியவும் வியப்படைகிறாள். வேலை புரியவந்த அரண்மனையிலோ ஏகப்பட்ட ரகசியங்கள்.
மகாராஜின் உத்தரவின்படி யமுனா ஷ்யாம் பிரகாஷைக் காண செல்கிறாள். அங்கே சென்ற பிறகு, மகாராஜின் மீது நடந்த கொலை முயற்சிக்கு ஷ்யாம் தான் காரணம் என அவளுக்கு தெரிய வருகிறது. அவனோ இனியும் முயற்சிகள் தொடரும் என எச்சரிக்கிறான். ஆனால் மகாராஜவோ ஷ்யாமின் மேல் அன்பு பாராட்ட, யமுனா குழப்பமடைகிறாள்.ஷ்யாமின் தாய் நந்தினி தான் மகாராஜின் முதல் மனைவி எனவும், பெற்றோரின் மிரட்டலுக்கு இணங்கி ராணி பத்மஜா தேவியை மறுமணம் செய்துகொண்டார் என அறிகிறாள்.
மீண்டும் சந்திக்கும் போது, யமுனா முதல் நாள் harbour-ல் வந்திறகிய போதே அவளைப் பார்த்துவிட்டதாகவும், அவள் மருள மருள விழித்ததைக் கண்டு காதல் கொண்டுவிட்டதாக ஷ்யாம் கூறுகிறான். சூர்யா பிரகாஷிடம் ஏற்பட்ட ஈர்ப்பினால், யமுனா அவனின் காதலை மறுக்கிறாள்.
யமுனவிற்காக சூர்யா பிரகாசிடம் தன் போராட்டத்தைத் தவிர்த்து வைர நகைகள், ஓட்டல் நிர்வாகம், வீடு என அனைத்தையும் ஒப்படைக்கிறான் ஷ்யாம். தான் உண்மையில் ஷ்யாமைதான் நேசிக்கிறோம் என்பதை உணர்ந்த யமுனாவும், அவனிடம் தன் காதலை வெளிபடுத்துகிறாள்.
இடையில், இவர்களின் காதல் விவகாரம் தெரியவர, சூர்யா தானும் யமுனாவை நேசிப்பதாகவும் தன்னை ஏற்றுக்கொள்ளும் படி கேட்கிறான். இதை கேட்டு விடும் ராணி பத்மஜா தேவி, தன் அண்ணனுடன் சேர்ந்து யமுனாவைக் கொல்ல திட்டம் தீட்டுகிறாள்!
- தன்னைச் சுற்றி நடக்கும் சூழ்ச்சி வலையிலிருந்து யமுனா எப்படி தப்பித்தாள்?
- ராணி பத்மஜா தேவியின் சுயரூபம் வெளிப்பட்டதா? மகாராஜா சந்திர பிரகாஷ் தன் முதல் மனைவி நந்தினியுடன் இணைந்தாரா?
இதை எல்லாம் கடந்து ஷ்யாம் பிரகாஷ், யமுனா இருவரும் எவ்வாறு இணைகிறார்கள் என்பதே “தீயாக உனைக் கண்டேன் “. இந்த சுவாரசியமான காதல் கதையை மறக்காம வாங்கி படிங்க!
