எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன்
தன் அக்காவினால் பெற்றோர் முன்னிலையில் எப்போதும் குற்றவாளி ஆக்கப்படுகிறாள் வர்ஷா. அக்காவோ சொத்தை விற்று விட்டு காதலனுடன் ஓடிவிட, அதிர்ச்சி தாங்கமுடியாமல் வர்ஷாவின் தந்தை இறந்துவிடுகிறார். வர்ஷாவின் அம்மா அவள் யாரையும் காதலிக்க கூடாது என சாத்தியம் வாங்குகிறார்.
கதையின் நாயகன் ஆகாஷ் வர்ஷா வேலை செய்யுமிடத்தில் அவளின் மேலதிகாரியாக இருக்கிறான். மூன்று வருடங்களாக அவளை ஒரு தலையாக காதலித்து வருகிறான். அவனை விரும்பினாலும் அம்மா வாங்கிய சத்தியத்தினால் ஆகாஷைக் கண்டுக்கொள்ளாமல் விலகிப் போகிறாள்.
இந்நிலையில் விவேக் வர்ஷாவைப் பெண் பார்க்க வர, திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்க ஆகாஷ் மற்றும் விவேக்கின் நண்பர்களான மாலதியும் மணியனும் களமிறங்குகிறார்கள்.
இந்த குழப்பங்களைக் கடந்து ஆகாஷ் வர்ஷா எப்படி இணைந்தனர் என்பதே தென்றலைத் தேடி! |