எழுத்தாளர் :முத்துலட்சுமி ராகவன்
நரேந்திரன் 36 வயதாகியாகும் திருமணமாகாமல் இருப்பவன். அவன் குடும்பத்திற்காக காதலைத் துறந்து தனது தம்பிக்காக மாமன் மகளை விட்டுக் கொடுத்தவன்.
நாயகி வித்யா தனது உயிர் தோழி பூர்ணிமாவின் மூலம் அவளின் பெரியண்ணன் நரேந்திரனைப் பற்றி அனைத்தையும் தெரிந்துக் கொண்டு நேரில் பாராமலே அவன் மீது காதல் கொள்கிறாள்.
பெரியண்ணன் திருமணம் செய்தால்தான் தானும் திருமணம் புரிவேன் என்று பூர்ணிமா பிடிவாதமாக சொல்விடுகிறாள். தங்கையைத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைக்க நரேன் வர , வித்யாவைச் சந்திக்கிறான். பூர்ணிமாவைச் சம்மதிக்க வைக்க , வித்யாவைத் தன் வருங்கால மனைவியாக நடிக்கமாறு உதவி கேட்கிறான். வித்யாவும் திட்டத்துக்குச் சரி சொல்ல , அவனுடன் மணிமுத்தாறு செல்கிறாள்.
நரேந்திரன் வித்யாவைக் காதலித்தாலும் , வயது வித்தியாசம் (15 வருடங்கள்) காரணமாகவும் , பிரம்மச்சாரியில்லை என்ற தாழ்வு மனப்பான்மையாலும் காதலைச் சொல்ல மறுக்கிறான். ஒரு கட்டத்தில் காதலை இருவரும் வெளிப்படுத்தி விட , இளைய தம்பி சுரேந்திரனை வித்யாவுக்கு திருமணம் முடிக்க தான் அழைத்தோம் என்ற குற்ற உணர்வில் தவிக்கிறான்.
இந்த உண்மை தெரியவர , மனமுடைந்த வித்யா வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.
| வீட்டை விட்டு வெளியேறும் வித்யாவை , நரேந்திரன் தடுத்தனா? வித்யா அவனை ஏற்றுக்கொண்டனா?
நரேந்திரன் , வித்யா என்ற இரு உள்ளங்களும் எப்படி கலந்தனர் என்பதே நதியோரம் நடந்தபோது… |
