எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர்
தொழிலதிபர் ஜீவபாலன் யாரும் செய்யமுடியாத ஒரு அசாதாரண காரியத்தைச் செய்து முடித்திருந்தார். இந்தியாவுக்கே வர மறுத்திருந்த பிரபல வெளிநாட்டு பாடகர் ஒருவரின் கச்சேரியை நடத்த திட்டமிட்டு , அதை ஏற்பாடு செய்திருந்தார். பாடல் நிகழ்ச்சியின் நாளும் நெருங்கி வந்து கொண்டிருந்தது.
சந்தோசத்தில் மிதந்துக் கொண்டிருந்தவரின் தலையில் இடிவந்திறங்கியது போல் அந்த செய்தி வந்துசேர்ந்தது. ஜீவபாலன் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு வேறு ஒரு தொழிலதிபர் ஏற்பாடு செய்த பாடல் நிகழ்ச்சிக்குச் செல்ல சம்மதித்துவிட்டார் என தெரியவும் அதிர்ந்துப்போகிறார்.
அந்த வெளிநாட்டு பாடகர் பணத்தைத் திரும்ப கொடுத்து விட்டாலும் ஏற்படும் அவமானத்தாலும் நஷ்ட்த்தாலும் அந்த பாடகர் மீது ஆத்திரம் திரும்புகிறது. கூலிப்படையைச் சேர்ந்த சுக்ராவைச் சந்திக்கிறார். இந்தியா வரும் அந்த பாடகரைக் கொலை செய்ய சொல்லி பணம் கொடுக்கிறார். சுக்ராவும் அவன் கூட்டாளி டீனுவுடன் மும்பைப் புறப்படுகிறான்.
ஜீவபாலனின் மகள் சக்கர நாற்காலியில் இருப்பவள். வெளிநாட்டு பாடகர் ஜீவபாலனின் அவரின் நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு வேறு ஒரு தொழிலதிபரின் நிகழ்ச்சியில் பங்கேற்க ஒத்துக்கொண்டதிற்கான காரணத்தை விளக்குகிறாள். நல்ல மனம் படைத்த அந்த பாடகரைக் கொலை செய்யும் திட்டத்தைக் கைவிடுகிறார். ஆனால் , எவ்வளவு முயற்சி செய்தும் சுக்ராவைத் தொடர்புப் கொள்ளவேமுடியவில்லை.
அவர் நினைத்தபடி பாடகரைக் கொலை செய்யும் முயற்சியைச் சரியான நேரத்தில் தடுத்தாரா?
சுக்ராவை எப்படி தொடர்புக்கொண்டார்? கொலை செய்ய சொன்னவரே , அதை தடுக்கும் முயற்சியில்… மாறுபட்ட கதையம்சத்துடன் நோ…