தரையில் கிடந்த கழுகு முட்டையை எடுத்து அடைகாத்துக் கொண்டிருக்கும் பெட்டை கோழியின் முட்டைகளிடயே வைத்தான் குடியானவன் ஒருவன். குஞ்சு பொரித்தும், கழுகுக்குஞ்சு, தானும் ஒரு கோழிக்குஞ்சுதான் என நினைத்து கொண்டு அவைகளே போலவே வளர ஆரம்பித்தது.
அதுவும் பிற கோழிக்குஞ்சுகளைப் போல, கொக்கரித்து, மண்ணைக் கிண்டி மண்புழுவைத் தின்றது. சிறகை விரித்து வானில் சில அடி தூரம் பறந்தது.
வருடங்கள் உருண்டோடியது. கழுகுக்குஞ்சு சற்று வளர்ந்திருந்தது. ஒரு நாள், வானில் பொன்னிறத்திலான ஒரு பெரிய ராட்சத பறவைவை கண்டது. அது தன் பொன் நிற இறக்கையால் காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்தது.
ஆச்சிரியத்தில் வாயைப் பிளந்த கழுகுக்குஞ்சு அருகிலிருந்த கோழிக்குஞ்சிடம் “யார் அது” என வினவியது.
“ஓ அதுதான் பறவைகளின் ராஜா கழுகு. ஆகாயத்தில் பறக்கும். நாம் கோழிகள், அதான் நிலத்தில் இருக்கிறோம்” என சொன்னது அந்த கோழிக்குஞ்சு.
இதை நம்பிக்கொண்டு கழுகுக்குஞ்சு, கோழியாகவே வாழ்ந்து, இறந்தும் போனது.
|
#சிந்தனை துளி
|
