எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன்
விக்ரம நாயக்கர் கட்டின அந்த பிரமாண்ட மாளிகையைக் கண்டு ஊரே பிரமித்து போயிருந்தது. அனைவரும் மூக்கில் விரல் வைக்கும்படி இருந்தது அது. அந்த வட்டாரத்திலே பெரிய ஆளான தன்னையே மிஞ்சிக்கொண்டு விக்ரம நாயக்கரின் பெயர் பிரபலமானதைக்கண்டு வயிறெரிந்தார் ஜம்புலிங்கம். விக்ரம நாயக்கரைக் கவிழ்க்க , ஒரு தாசியைக் கொண்டு வர அவர் திட்டமிட்டபடியே விக்ரம நாயக்கர் வீழ்ந்தார்.
மந்திரம் , சூன்னியதில் வல்ல அந்த தாசியின் வீடே கதியாக கிடந்தார் விக்ரம நாயக்கர். மனைவி பங்கஜம் அழைத்தும் வர மறுத்துவிட்டார். ஆறு பெண் குழந்தைகளுடன் கதிகலங்கிப் போனார் பங்கஜம். பங்கஜத்தின் அண்ணன் வர , நடந்த வாக்குவாதத்தில் விக்ரம நாயக்கர் சுட்டுக் கொல்லப்பட்டார். செய்தியைக் கேட்டு பஞ்சகம் தன் குழந்தைகளுடன் தூக்கில் தொங்க கடைசி பெண் குழந்தையின் கயிறு அறுபட்டு , அவள் மட்டும் பிழைத்தாள்.
அன்று முதல் அந்த வீட்டில் ஆவிகளின் நடமாட்டம் ஆரம்பிக்க , அந்த மாளிகை முழுவதுமாக பூட்டப்பட்டது. பங்கஜம் மற்றும் ஐந்து பெண் குழந்தைகளின் ஆவிகள் தான் மாளிகை அந்த தாசியின் கைக்கு சென்றுவிட கூடாது என இப்படி செய்கிறார்கள் என ஊர் மக்களிடம் பரவ ஆரம்பித்தது.
அதை மீறி அங்கு யார் சென்றாலும் மீண்டும் உயிருடன் திரும்ப வந்ததே இல்லை. இந்த நிலையில் , செல்லமுத்து கவுண்டரிடம் அவரின் நண்பர் மாளிகை குறைந்த விலைக்கு வருவதாகவும் இருவரும் சேர்ந்து வாங்கலாம் என ஆலோசனை தார , அவரும் அதற்கு சம்மதிக்கிறார். ஆனால் மாளிகையைப் பார்க்க சென்ற நண்பரோ , புத்தி பேதலித்த நிலையில் தான் வந்து சேர்ந்தார்.
பேய் ஆவியின் மீது நம்பிக்கை இல்லாத செல்லமுத்து கவுண்டர் , மாளிகையின் மர்மத்தின் கண்டறிய தானே செல்ல முடிவெடுக்கிறார். அவரின் நிலை என்ன? மாளிகையின் மர்மம் வெளிப்பட்டதா?
