எழுத்தாளர்: பட்டுக்கோட்டை பிரபாகர்
தங்கைக்குப் பணக்கார வீட்டு மாப்பிள்ளையின் வரன் கிடைத்ததும் குதுகூலமடைகிறான் சிவா. திருமணம் வேண்டாம், வேலை செய்ய வேண்டும் என முதலில் முரண்டு பிடித்த தங்கை மஞ்சரியும் மாப்பிள்ளை குமரனின் புகைப்படத்தைப் பார்த்ததும் கல்யாணத்திற்கு சம்மதம் தந்துவிட்டாள். ஆனால் ஊரில் பணக்காரர்கள் ஏன் ஏழை வீட்டில் சம்பந்தம் செய்யவேண்டும் , ஒரு வேளை இதில் வில்லங்கம் எதாவது இருக்குமோ என புரளி பேச்சு எழ சிவா பதட்டமடைகிறான்.
உடனடியாக மாப்பிள்ளையைப் பற்றி விசாரிக்க கிளம்புகிறான். எதேச்சையாக குமரனின் நண்பன் பத்ரியைக் காண குமாரனைப் பற்றி நல்லவிதமாகவே கேள்விப்படுகிறான். மனம் நிம்மதி அடைத்து மறுபடியும் ஊருக்கே புறப்படுகிறான்.
இதே சமயத்தில் தனது முன்னாள் காதலி பூஜாவை மறக்கமுடியாமல் மஞ்சரியையும் கல்யாணம் செய்ய முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறான். காலேஜ் சமயத்தில் சதிச்செயலால் பூஜா குமரனைத் தவறாக புரிந்துவிட, அவனை விட்டு பிரிந்து சென்றுவிடுகிறாள். அவளின் நினைவால் தவிக்கும் குமரனைப் பத்ரி ஆறுதல் படுத்தி மஞ்சரின் மீது கவனத்தைச் செலுத்த சொல்கிறான்.
கணவன் ஆகாஷை விட்டு விலகி பூஜா தனியாக இருக்கிறாள். அவளைத் தேடி ஆகாஷ் வரவும் ஆத்திரமடைகிறாள் பூஜா. விவாகரத்து நடக்கவிருக்கும் சூழ்நிலையில் அவன் அவளுடன் தங்கவந்ததைப் பூஜா எதிர்க்க , அவனோ துருப்பு சீட்டாக ஒரு விடியோவைக் காண்பிக்கிறான். பேச்சிழந்து போகிறாள் பூஜா.
இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி ஆகாஷ் குமரனிடமிருந்து பணம் கறக்க முயல அவன் திட்டம் நிறைவேறியதா? குமரன் மஞ்சரி இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தார்களா?
படிக்க தவறாதீர்கள்… ம்…
