எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம்
சூர்யா பிரகாஷுக்கும் சுசித்ராவுக்கும் பெரியோர்கள் நிச்சயிக்க திருமண ஏற்பாடு நடக்கிறது. ஆனால் திருமணத்தன்று கல்யாண பெண் காணாமல் போய்விட , அவளின் தங்கையான தாமரை , சூர்யா பிரகாஷுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறாள்.
சுசித்ராவை அவள் காதலித்து ஏமாற்றிய காதலன் கடத்தி சென்று விடுகிறான். முதலில் மாமனாரின் மீதும் தாமரையின் மீதும் சூர்யா பிரகாஷ் சந்தேகம் படுகிறான். இருவரின் உரையாடலையும் எதேச்சையாக போன் வழி சூர்யா கேட்டுவிட , தான் தவறாக சந்தேகம் பட்டதை எண்ணி வருத்தப்படுகிறான்.
தன்னை கடத்திச் சென்ற காதலன் நந்தாவிடமிருந்து தப்பித்து சுசித்ரா சூர்யாவைத் தேடி வருகிறாள். ஆனால் அவனோ தாமரையிடம் லயித்திருப்பதைக் கண்டு பொறமைக் கொள்கிறான். பொறாமையினால் தாமரையைக் கொலை செய்ய முயற்சிக்கிறாள் சுசித்ரா.
சுசித்ராவின் திட்டத்திலிருந்து தாமரை தப்பித்தாளா?
இன்னல்களைக் கடந்து சூர்யா பிரகாஷ் தாமரை இணை எவ்வாறு இணைந்தனர் என்பதே வைகை நதியோரம்.