விஷ அம்பு பட்ட சிப்பாய் ஒருவன் மரண படுக்கையில் இருந்தான். அருகிலிருந்த நண்பர்களும் உறவினர்களும் அவசர அவசரமாக மருத்துவரை அழைத்து வந்தனர். ஆனால் சிப்பாயியோ முதலில் தனது மூன்று கேள்விகளுக்குப் பதில் வேண்டும் எனவும் அதுவரை எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ள மாட்டேன் என முரண்டு பிடித்தான்.
- அவன் மீது அம்பு செலுத்தியவன் கருப்பா, சிவப்பா ?
- அவன் இந்த நாட்டை சேர்த்தவனா அல்லது வெளியூரா ?
- அவன் நெடியவனா இல்லை குள்ளமா?
என்பதே அந்த மூன்று கேள்விகள்.
இந்த கேள்விகளுக்கு பதில் வேண்டும் என்ற அவனின் அசட்டு பிடிவாதத்தால், உரிய நேரத்தில் அவன் தேகத்திலிருந்து அந்த விஷ அம்பை எடுக்க முடியாமல் அவனின் உயிர் பிரிந்தது.
|
#சிந்தனை துளி
|
