எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன்

சுவேதா ஒரு நிறுவனத்தில் காரியதரிசியாக பணிபுரிகிறாள். அவளின் முதலாளி நோய்வாய் பட, மகன் ரிஷி ஆபிஸ் பொறுப்பை ஏற்கிறான். ஒரு சந்தர்ப்பத்தில் ரிஷி தன் முதலாளியின் மகன் என அறியாமல் “யார் நீ” என ஸ்வேதா கேட்டுவிட ரிஷி கோபமடைகிறான்.
நிறுவன பொறுப்பை ஏற்ற பிறகு ரிஷி சுவேதாவிடம் கடுமையாக நடந்துக்கொள்கிறான். முதலாம் சந்திப்பில் நடந்ததை மனதில் வைத்துக்கொண்டு அடிக்கடி வறுத்தெடுக்கிறான். தன்னை விட்டு பிரிந்து போன, எப்படியும் வாழ நினைக்கும் காதலின் நினைவு சுவேதாவால் மறக்கடிக்க படுவதை ரிஷி உணர்கிறான்.
ஒரு நாள் ஆபிசில் தன்னை வறுத்தெடுக்கும் ரிஷி மேல் உள்ள எரிச்சலில் ஸ்வேதா எதிர்த்து பேசிவிடுகிறாள். சுவேதாவின் திமிர் பேச்சால் ஆத்திரமடையும் ரிஷி அவளை ஆள்கிறான்.
தான் செய்த தவற்றைத் தந்தையிடம் சொல்லி ரிஷி சுவேதாவை திருமணம் செய்துகொள்கிறான். முதலில் விலகி நிற்கும் சுவேதா, ரிஷி தன் மேல் கொண்டிருக்கும் அன்பை உணர்ந்து மெல்ல மெல்ல அவன் மேல் காதல் கொள்கிறாள்.
சுவேதா தாய்மையடைய, வாழ்க்கை சுகமாக சென்றுகொண்டிருக்க புயல் போல் ரிஷியின் பழைய காதலி அவர்களின் வாழ்வில் நுழைகிறாள். அவள் குழப்பத்தை உண்டுபண்ண, ஒரே வீட்டில் இருந்தாலும் சுவேதா ரிஷியை விட்டு தள்ளி வாழ்கிறாள்.
ரிஷி மேல் தவறில்லை என்பதை ஸ்வேதா உணர்வாளா?
இந்த குழப்பங்களை எல்லாம் கடந்து ரிஷி சுவேதா எப்படி மீண்டும் ஒன்றிணைந்தனர் என்பதே இனிதாக ஒரு விடியல்.

