எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன்

அமெரிக்காவில் வேலை செய்யும் கௌசிக் அங்கே எலிசபெத் என்ற ஆங்கிலேய பெண்ணைக் காதலிக்கிறான். வீட்டில் திருமண பேச்சு எழ எலிசபெத்தைக் காதலிப்பதால் மறுத்து பேசுகிறான். ஆனாலும் , தாயின் தற்கொலை மிரட்டலுக்கு பயந்து ஐஸ்வர்யாவைத் திருமணம் புரிந்துக்கொள்கிறான். மனைவி ஐஸ்வர்யாவின் அழகு அவனை ஆகர்ஷிக்கிறது.
திருமண இரவன்று எலிசபெத் போன் செய்யவும், ஐஸ்வர்யாவிடமிருந்து கௌசிக் விலகுகிறான். மறுநாள் காலை எலிசபெத் மறுபடியும் போன் செய்ய, அதை ஐஸ்வர்யா எடுக்கவும் உண்மையனைத்தும் அறிந்து கௌசிக்கிடம் கோபப்படுகிறாள்.
மறுவீடு விருந்துக்கு வந்த பேத்தியிடம் எதோ ஒரு வேறுபாட்டை உணர்கிறார் பாட்டி பாரிஜாதம். ஐஸ்வர்யாவிடம் நயமாக பேசி நடந்த விஷயத்தை கறக்கிறார். கேட்டறிந்ததைப் பேரன் ஆனந்திடம் சொல்லி, அவனின் பின்னல் சுத்தும் கௌசிக்கின் தங்கை சாதனைவிடம் கேட்க சொல்கிறார்.
சாதனா நடந்த உண்மைகளை ஆனந்திடம் கூற, இந்த பிரச்சனையைத் தீர்க்க வழி தேடுகிறார்கள். தோழி லிஸியின் உதவியுடன் எலிசபெத்தைக் காதலிக்கும் வில்லியத்துடன் அவளைச் சேர்த்து வைக்க திட்டம் தீட்டுகிறார்கள்.
|
