எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன்

தொலைபேசியில் ராங் நம்பர் மூலமாக அனாமிகா என்கிற பெண் ஜெகந்நாதனுக்கு அறிமுகமாகிறாள். அவளிடம் தன் பெயரைத் தருண் என மாற்றி சொல்கிறான். இருவரும் அடிக்கடி பேசிக் கொள்ள, அவளின் பேச்சால் கவரப்பட்ட ஜெகன் தன் காதலை சொல்கிறான்.
ஆனால் அனாமிகாவோ காதலை மறுத்து பிரிவைச் சொல்கிறாள். காதல் தோல்வியில் இருக்கும் ஜெகனுக்கு பெரியவர்கள் நிச்சயிக்க ஹரிணியுடன் திருமணம் நடைபெறுகிறது. முதலில் விலகியிருப்பவர்கள் கூட முயலும் போது, ஜெகன் “அனாமிகா” என தன்னை அறியாமல் கூறிவிட ஹரிணி அதிர்ச்சி அடைகிறாள்.
இனிமேல் மறைத்து பயனில்லை என உணர ஜெகன் அனாமிகா பற்றிய உண்மையைக் கூறுகிறான். சில நாட்கள் கழித்து வீட்டில் ஒரு கோப்பையைக் காணாமல் ஜெகன் தேடுகிறான். தேடும்போது ஹரிணி எழுதிய கவிதை ஒன்று கண்ணில் பட அதை படிக்கிறான். அவளின் கவிதை அனாமிகாவின் கவிதை போலவே இருக்க ஹரிணி தான் அனாமிகா என்பது புலப்பட, ஏன் தன்னிடம் ஹரிணி இதை மறைக்க வேண்டும் என புரியாமல் குழம்புகிறான்.
அதே நேரம் ஹரிணியும் அதே அறைக்கு வருகிறாள். ஜெகனின் கையில் அவளின் கவிதை , திகைத்து நிற்கிறாள் அவள்.
தான்தான் அனாமிகா என்பதை ஹரிணி என் ஜெகனிடமிருந்து மறைத்தாள்?
இந்த குழப்பங்களைக் கடந்து ஜெகனும் ஹரிணியும் எப்படி இணைந்தனர் என்பதே யார் அந்த நிலவு…
