எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம்
நீலவேணி சென்னையில் படிப்பு முடிந்து ஊர் திரும்புகிறாள். ரயில் நிலையத்தில் தவறுதலாக மோகனின் மீது மோதிவிடுகிறாள். உணவுக்காக ரயிலில் இருந்து கீழே இறங்கும் போது மறுபடியும் இருவரும் மோதிக் கொள்கிறார்கள்.
ஊருக்குத் திரும்பும் நீலவேணி , வில்லுப்பாட்டு பாடும் தன் அம்மா கிருஷ்ணவேணிக்கு தொண்டையில் புற்றுநோய் என தெரிய வரவும் துடித்துப் போகிறாள். அம்மாவிற்குப் பதிலாக பாடும் நிர்பந்தத்திற்கு உள்ளாகிறாள். பாடுவதற்கு மோகனின் ஊருக்குச் செல்கிறாள்.
பாட வந்தவளிடம் மோகனின் சித்தப்பா மகன் ஈஸ்வர் தவறாக நடக்க முயற்சிக்கிறான். சரியான சமயத்தில் மோகன் அவளைக் காப்பாற்றி ஈஸ்வரை அடித்து உதைக்கிறான்.
இதற்கிடையில் நீலவேணியின் அம்மா இறந்துவிடுகிறார். இறக்கும் தறுவாயில் மோகனின் மாமா கோபாலகிருஷ்ணன் பார்த்துவிடுகிறார். பஞ்சாயத்தில் ஈஸ்வரின் அப்பா நீலவேணியையும் அவளின் தொழிலையும் வேண்டுமென்றே கேவலப்படுத்துகிறார்.
வெகுண்டு எழுந்த நீலவேணியின் தந்தை கண்ணப்பன் அவனாக கொன்றுவிடுகிறார். மோகன் பஞ்சாயத்தின் நடுவே நீலவேணியைத் திருமணம் செய்துகொள்கிறான். அவர்கள் இருவரும் கோபாலகிருஷ்ணன் மாமா வீட்டிற்குச் சென்று வாழ்கிறார்கள்.
இறுதியில் தன் அம்மாவின் ஆசைப்படி நீலவேணி கல்லூரி பேராசிரியை ஆனாளா?
ஒரு பெண்ணின் வாழ்வின் போராட்டங்களைச் சொல்லுவதே உன்னை நானறிவேன் புதினம்.
