எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம்
கணவன் இறந்ததை நேரில் பார்த்த மான்விழியின் தாயார் பார்வதி மனநலம் பாதிக்கப்படுகிறார். எதேச்சையாக பார்வதியின் அண்ணன்மார்கள் மான்விழியைப் பார்க்க , இறந்ததாக நம்பப்படும் தங்கை பார்வதி உயிரோடு இருப்பதை உணர்கிறார்கள். பார்வதியைத் தங்களுடன் அழைத்து செல்ல விழைகிறார்கள். மான்விழியையும் அமுதனையும் உடன் அழைக்கிறார்கள்.
வேலை காரணமாக தாயையும் தங்கையும் விட்டுவிட்டு அமுதன் சென்னைக்குத் திரும்புகிறான். வாசலில் கோலமிட்டவளைப் பார்த்தவுடனே காதல் வயப்படுகிறான் பெரிய மாமாவின் மூத்த மகன் ராஜேந்திரன். அத்தை பெண் என்ற முறையில் அவளை வம்புக்கு இழுக்கிறான். ஆனால் ராஜேந்திரனின் தாயும் , பார்வதி திருமணத்திற்கு மறுத்ததாக நம்பப்படும் மாப்பிள்ளையின் தங்கையான வசுந்திரா , மான்விழியை வெறுத்துப் பேசுகிறாள்.
குற்றாலத்திற்கு சென்ற போது , மலையின் உச்சியிலிருந்து அத்தை பார்வதியைக் காப்பாற்றும்போது ராஜேந்திரனுக்கு அடிபடுகிறது. ராஜேந்திரன் தன் காதலைச் சொல்ல , மான்விழி அவனை ஏற்கிறாள். அவளை நெஞ்சோடு அணைத்துக்கொண்ட போது , அவனின் தாயார் வசுந்தரா பார்த்துவிட , பிரளயம் உண்டாகி மான்விழியைக் கடுஞ்சொற்களால் திட்டுகிறார்.
மயக்கம் தெளிந்து , சுயநினைவிற்கு வரும் பார்வதி உண்மையை எடுத்து கூறியும் வசுந்தரா ஏற்க மறுக்க , மான்விழி அன்னையை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அங்கே அமுதனும் வந்து சேர்கிறான். வசுந்தராவின் அண்ணன் மனைவி மலர்க்கொடி வரவும் , பார்வதி தன் அண்ணனைப் பற்றி சொன்னதும் அத்தனையும் உண்மை என தெரிய வர , வசுந்தரா குமுறி அழுகிறாள்.
பிரிந்த குடும்பம் இணைகிறது ஆனால் மான்விழியோ திருமணத்திற்கு மறுக்கிறாள்.
இரு காதல் உள்ளங்கள் இன்னல்களைக் கடந்து எவ்வாறு இணைந்தன என்பதே உன்னைக் கரம் பிடித்தே…
