எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம்
பெரியவர் ஒருவர் தற்கொலை செய்ய முயலுவதை நிலா பார்த்துவிடுகிறாள். அவரைக் காப்பாற்றவும் , இறந்துப் போன தன் மகளைப் போலவே வசந்த நிலா என பெயர் கொண்ட நிலாவை அந்த பெரியவர் தன் மகளாக ஏற்றுக் கொள்கிறார்.
கல்யாண மாப்பிளை சத்தியனைப் பிடிக்காமல் பெரியவரின் மகள் வசந்த நிலா தற்கொலை செய்துகொண்டதாக நம்பப்படுகிறது. வசந்த நிலவின் சித்தப்பா மகனான வாசு நிலாவை வெறுக்கிறான்.
ஒரு கட்டத்தில் , வசந்த நிலாவை வாசுதான் கொலை செய்தான் என நிலாவுக்குத் தெரிய வருகிறது. சத்தியனோ நிலாவின் மீது காதல் வயப்படுகிறான். வாசுவைப் பற்றின உண்மையை நிலா கூற , சத்தியன் அதை நம்ப மறுக்கிறான். தொலைபேசி உரையாடல் வழியாக உண்மையைச் சத்தியனுக்கு நிலா உணர்த்துகிறாள்.
இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கடந்து இந்த காதல் ஜோடிகள் எப்படி ஒன்று சேர்ந்தனர் என்பதே உன் வானம் நான்… |
|---|
