எழுத்தாளர்: ராஜேஷ்குமார்
அலுவலகத்தில் இருக்கும் ஜெய்ந்த்க்கு, தாலியா என்கிற பெண் போனில் அழைக்கிறாள். அன்று மாலை அவனுக்கு நிச்சயதார்த்தம் என்ற நிலையில் மணப்பெண் பதஞ்சலி தவறான நடத்தைக் கொண்டவள் எனத் தாலியா சொல்கிறாள். அதை பற்றி மேலும் பேச அவனை ஒரு உணவகத்துக்கு வர சொல்கிறாள். ஜெய்ந்த் அங்கே செல்ல அவன் முன் வந்து நிற்பதோ பதஞ்சலி!
தாலியா என்ற பெயரில் அவள்தான் போனில் பேசியதாகவும் இந்த திருமணத்தை நிறுத்தவே அப்படி செய்தாக கூறுகிறாள். தான் கந்தர்வன் என்பவரைக் காதலிப்பதாகவும் அவனின் புகைப்படத்தையும் ஜெய்ந்திடம் காட்டுகிறாள். போட்டோவில் இருக்கும் முகமோ தீயில் தீய்ந்து அவலட்சணமாக இருந்தது. பௌர்ணமி நிலவு போல் பிரகாசிக்கும் பதஞ்சலி ஏன் இப்படிப்பட்டவனைக் காதலிக்க வேண்டும் என புரியாமல் அவள் சொற்படியே நிச்சயதார்த்தை நிறுத்துகிறான்.
இருந்தாலும் மனம் ஆறாமல் கந்தர்வனைச் சந்திக்க செல்கிறான். அங்கே சென்றால் ரத்த வெள்ளத்தில் கந்தர்வன்! யாரும் இருக்கிறார்களா என ஜெய்ந்த் சுத்தி பார்க்கவும் கழுத்தில் சுருக்கென அடி விழுகிறது. தட்டு தடுமாறி எழவும் நேப்பாளி போல முகம் கொண்ட ஒருவன் ஓடுவதை காண்கிறான். அவனைத் துரத்திக் கொண்டு ஓட, அவனோ கண் பார்வையிலிருந்து மறைகிறான்.
வாட்ச்மன் தென்பட, அவனும் யாரும் பார்க்கவில்லை என கூறுகிறான். போலீசுக்கு போன் செய்ய இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் உயிர் ஊசலாடி கொண்டிருக்கும் கந்தர்வனை மருத்துவமனையில் சேர்கிறார். மருத்துவமனைக்குப் பதஞ்சலி வர கந்தர்வன் மேல் உள்ள ஆத்திரத்தால் அவனை பழிவாங்கிவிட்டதாக ஜெய்ந்திடம் கத்துகிறாள். அதிர்ச்சி அடையும் ஜெய்ந்த் தான் கந்தர்வனைக் கொலை செய்ய முயற்சிக்கவில்லை என மறுக்கிறான்.
இவர்களின் உரையாடலை இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் கேட்டுவிட ஜெய்ந்த்தை லாக்கப்பில் அடைகிறார். இன்னும் 2 மணிநேரத்தில் தனக்கு வாக்கு மூலம் வேண்டும் என மிரட்டி விட்டு செல்கிறார். வாட்சமேனிடம் விசாரிக்க அவனோ ஜெயந்த் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என கூற, அவன் ஜெயந்த் கந்தர்வனை கொலை செய்ய முயற்சித்ததை நேரில் பார்த்ததாக வாக்குமூலம் சொல்ல வேண்டும் என இன்ஸ்பெக்டர் மாற்றி சொல்ல சொல்லி மறைமுகமாக மிரட்டுகிறார்.
ஜெயந்தின் தந்தை விஷ்வேஷ்வர் வர, சாட்சியாக வாட்ச்மனை இன்ஸ்பெக்டர் நிறுத்துகிறார். போலீஸ் கமிஷ்னர் இன்ஸ்பெக்டரை வர வழைக்க, அதிகார துஷ்பிரோயோகம் செய்ததைப் பற்றி வினவுகிறார். இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் ஜெயந்த் குற்றவாளி இல்லை என்பதைப் பார்த்தே நொடியே தனக்கு தெரியும் எனவும் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்கவே இப்படி செய்தாக உண்மையைச் சொல்கிறார்.
கந்தர்வனைக் கொலை செய்ய முயற்சித்தவனை, ஜாமினில் வந்த ஜெயந்த் பார்த்துவிட அவனைத் துரத்திக்கொண்டு போன பங்களாவில் முகம் முழுக்க ரத்தத்துடன் இறந்து கிடக்கிறான். அந்த பங்களாவின் நிஜ உரிமையாளர் வெளியூரில் இருக்க பங்களாவின் வாட்ச்மன் கண்ணுசாமியோ விஷ சாராயம் குடித்து அரசாங்க மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான் என தெரிய வருகிறது.
உயிரை விடும் முன் தன்னைக் கட்டாயப்படுத்தி இருவர் விஷ சாராயத்தைக் குடிக்க வைத்ததாக வாக்குமூலம் கொடுக்கிறான். விசாரணை போகும் இடம் தெரியாமல் தடைபட்டு நிற்க, ஒரு பெருமூச்சுடன் இன்ஸ்பெக்டர் ஆஸ்பத்திரி வராண்டாவில் நடந்து செல்ல, அவர் பின்னால் ஒரு பெண்ணில் குரல். தான் கந்தர்வனைக் கொலை செய்ய முயன்ற தாயால்சிங்கின் மனைவி சாயா எனவும் , அவரிடம் அவசரமாக பேசவேண்டும் என சொல்கிறாள்.
அதிர்ந்து போன இன்ஸ்பெக்டர் அந்த முக்கியமான விஷத்தையைப் பேச ஒரு தனி அறைக்குச் செல்ல, சாயா பின் தொடர்கிறாள். அறைக்கு வந்ததும் அவர் விசயத்தைச் சொல்ல சொல்லி திரும்ப, அங்கோ அவள் இல்லை. தன் பின்னாலே வந்தவள் எங்கே போனாள் என இன்ஸ்பெக்டர் தேட, அவளோ வந்த சுவடே தெரியாமல் காணாமல் போயிருந்தாள்!
பல மர்மங்களும் திருப்பங்களும் நிறைந்த இந்த கதையைப் படிக்க படிக்கத்தான் பல சம்பங்களுக்கான மர்ம முடிச்சுகள் அவிழும்! புதிரை கண்டுபிடிக்க “நான் நானல்ல” நாவலை நாடுங்கள்! |
|---|
