ஒரு கிராம் துரோகம் (Oru Gram Dhrogam)

எழுத்தாளர்: ராஜேஷ்குமார்

நம் துப்பறியும் ஹீரோ விவேக் மனைவி ருபாலாவுடன் திருமணத்திற்கு செல்லும் வழியில் ஒரு சாலை விபத்தைப் பார்க்கிறான். ஒரு பெண் ரத்த வெள்ளத்தில் மிதக்க ருபாலாவை அனுப்பிட்டு இன்ஸ்பெக்டர் நந்தகுமாரிடம் சாலை விபத்தைப் பற்றி கேட்டு அறிகிறான். தடயங்களை உற்று பார்த்ததில் இது கண்டிப்பாக சாலை விபத்து இல்லை, திட்டமிட்டு நடந்த கொலையாக தான் இருக்க முடியும் என சொல்கிறான்.

உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கிறான் விவேக். அந்த பெண்ணின் கைரேகையை வைத்து அவள் பெயர் ஈஸ்வரி எனவும், கணவனையும் மாமியாரையும் கொலை செய்துவிட்டு நன்னடத்தைக் காரணமாக ஆயுள் தண்டனை குறைந்து சிறையிலிருந்து விடுவைக்கப்பட்டாள் என தெரிய வருகிறது.

அவளின் பேக்கைப் பரிசோதிக்க அதில் ரத்த கரை படிந்த கையுறையும் கைத்துப்பாக்கியும் கிடைக்கிறது. ரத்ததைப் பரிசோதிக்க , அது ஒரு பெண்ணின் ரத்தம் என தெரியவருகிறது. ஈஸ்வரியின் அண்ணன் உதயமூர்த்தியை விவேக்கும் நந்தகுமாரும் சந்திக்க, தன் தங்கை ஈஸ்வரிக்கு வாகனம் ஓட்ட தெரியாது. அவள் எப்படி அந்த காரை ஓட்டியிருப்பாள் என கேட்க திகைக்கிறான் விவேக்.

கதை டெல்லியை நோக்கி நகர்கிறது. சியாமளா தேவி சோலார் எனர்ஜி சம்பந்தமாக ஒரு செமினாருக்குச் செல்ல தயாராக அப்போது அவள் தங்கியிருக்கும் ஹோட்டல் அறையின் கதவு தட்டப்படுகிறது. கதவை திறக்கவும் ஒரு பணியாள் டம்ளர் ஜுபீஸுடன் உள்ளே வருகிறான். சியாமளா அந்த ஜூஸ் பருகாவிட்டால் தனது கத்திக்கு பலியவள் என மிரட்டுகிறான்.

பயத்தில் ஜூஸ் அருந்தி சியாமளா மயங்கி விழுந்து விட, அந்த பணியாள் ஹோட்டல் விட்டு வெளியேறி பூக்கள் விற்கும் கூடைக்காரியிடம் சென்று “வேலை முடிந்துவிட்டது” என சொல்லிவிட்டு செல்கிறான். பூக்காரியோ நிஜத்தில் ஒரு போலீஸ் அதிகாரி. தன் உயர் அதிகாரியிடம் நடந்தை கூறிவிட்டு லிஃட்டில் எற அவள் பின்னாடி இன்னொரு இளைஞனும் ஏறுகிறான். லிஃட்டில் எறியவன் துப்பாக்கி காட்டி மிரட்டி மொட்டை மாடிக்கு அழைத்து செல்கிறான்.

அவள் கிரைம் பிரான்சைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி எனவும் சோலார் எனர்ஜி சம்பந்தமாக டெல்லி வந்த சியாமளா தேவியை கண்காணிக்க அவள் வந்திருக்கிறாள் என்பது தனக்கு தெரியும் என சொல்கிறான். ஏன் சியாமளா தேவியை அவள் கண்காணிக்கிறாள் என காரணத்தைக் கேட்கிறான். அப்படி அவள் சொல்லாவிட்டால் இந்த மொட்டை மாடியிலிருந்து அவள் விழ வேண்டியிருக்கும் அல்லது துப்பாக்கி குண்டுக்கள் அவள் மீது பாயும் என மிரட்டுகிறான் அந்த இளைஞன்.

அவன் அசந்த சமயத்தில் துப்பாக்கியை வர்ஷினி பிடுங்க, “அவன் யார்? ஏன் தன்னை பின் தொடர்ந்து வந்தான்?’ என விசாரிக்கிறாள். வழிந்த வேர்வையைத் துடைக்கும் சாயலில் அவனோ சயனைடு சாப்பிட்டு விட, அவளை சியாமளா தேவியின் விஷயத்தில் தலையிடவேண்டாம் இல்லையேல் அது ஆபத்தில் கொண்டு போய் முடியும் என எச்சரித்துவிட்டு இறந்து போகிறான்.

  • ஒரு பெண்ணைக் கொலை செய்து விட்டு வரும் வழியில் விபத்தில் மாட்டிக்கொண்ட ஈஸ்வரி கொலை செய்த பெண் யார்? கொலைக்கு என்ன காரணம்?
  • ஈஸ்வரிக்குக் கார் ஓட்ட தெரியாத நிலையில் இந்த விபத்து எப்படி நடந்தது?
  • சியாமளா தேவியைக் காவல்துறை கண்காணிக்க என்ன காரணம்?

சோலார் எனர்ஜி சுற்றி நிலவும் இந்த மர்மங்களுக்கு விடையைத் தெரிந்துகொள்ள ஒரு கிராம் துரோகம் நாவலை நாடுங்கள்.

close
LET’S KEEP IN TOUCH!

We’d love to keep you updated with the latest posts and stories😎

We don’t spam! Read our privacy policy for more info.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

EnglishTamil