பூவும் பொட்டும் (Poovum Pottum)

எழுத்தாளர்: கலைவாணி சொக்கலிங்கம்

நர்மதா வயிற்றில் குழந்தையுடன் இருக்கும் ஒரு கைம்பெண். மன உளைச்சலில் நர்மதா தற்கொலை செய்யும் முயற்சியுடன் ஒரு வாகனத்தின் முன் விழுகிறாள். காரை ஓட்டி வந்த மனோகர் சரியான நேரத்தில் பிரேக் போட , அந்த தற்கொலை முயற்சி தடுக்கப்படுகிறது.

டாக்டரான மனோகர் நர்மதாவைக் காப்பாற்றி அவள் மீது மனதைப் பறிகொடுக்கிறான். நர்மதாவைத் திருமண செய்யும் ஆசையை வெளிப்படுத்துகிறான். மனோகரின் அக்கா டாக்டர் சிவசங்கரியின் திருமணம் டாக்டர் பிரபாகரனுடன் எட்டு வருடங்களுக்கு முன் நிச்சயிக்கப்பட்டு , நடைபெறாமல் நின்றுவிடுகிறது. திருமணம் நின்றுவிட்டாலும் பிரபாகரன் சங்கரின் நினைவாகவே வாழ்கிறான்.

வரதட்சனை பிரச்னையால் திருமணம் நின்றுவிட்டதாக சங்கரி உட்பட அனைவரும் நினைக்க , நடத்தைக் கெட்ட சங்கரின் தந்தை தான் முக்கிய காரணம் என்ற உண்மையைச் சங்கரியின் அன்னை கூறி பிரபாகரின் பெருந்தன்மையை எடுத்துரைக்கிறார்.

  • தன் காதலைச் சொன்ன மனோகரை நர்மதா ஏற்றுக்கொண்டாளா?
  • தன் தவறை உணர்ந்து சங்கரி பிரபாகரனைத் தேடி சென்றாளா?

மனோகர் + நர்மதா, பிரபாகரன் + சிவசங்கரி இணை வாழ்க்கையில் எப்படி இணைந்தனர் என்பதே பூவும் பொட்டும்.

close
LET’S KEEP IN TOUCH!

We’d love to keep you updated with the latest posts and stories😎

We don’t spam! Read our privacy policy for more info.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

EnglishTamil