எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன்
அனுபமா மேற்படிப்புக்காக பொறியியல் கல்லூரியில் சேருகிறாள். தொழிலதிபரான சுந்தரம் தன்னுடைய பொறியியல் கல்லூரியில் படிக்க வரும் அனுபமாவைக் கண்டவுடனே காதல் வயப்படுகிறான். சுந்தரம் தன்னை காதலிப்பது தெரியாமல் அவனிடம் ஒரு தனி மரியாதையுடன் அனுபமா பழகுகிறாள்.

அனுபமாவின் மேல் கொண்ட காதலால் அவள் வாழ்வில் வரும் வாகீசன் , முகிலனை அவள் அறியாமல் அப்புறப்படுத்துகிறான். இடையில் அனுபமாவின் பெற்றோர் இறந்துவிட ஆதரவின்றி இருக்கும் அவளை தன்னுடன் அழைத்து செல்கிறான் சுந்தரம். அவளை பாதுகாப்பில் வைத்துக் கொள்ள , அவளின் சம்மதத்தின் படி திருமணம் புரிகிறான்.
கல்யாணமாகி சில வருடங்கள் உருண்டோட பிள்ளை பெரு இல்லாததால் மற்றவர்களின் கடுஞ் சொற்களுக்கு ஆளாகிறாள் அனுபமா. சுந்தரம் தன் மனைவிக்கு ஆறுதலாகவும் துணையாகவும் நிற்கிறான். பல வித பிராத்தனைகளுக்குப் பிறகு வரிசையாக மூன்று குழந்தைகள் பிறக்கின்றன…
- சுமூகமாக சென்று கொண்டிருக்கும் குடும்ப வாழ்க்கையில் புயல் வீசினால் அனுபமா தாங்குவாளா?
- சுந்தரத்தினால்தான் தான் முதலில் காதலித்த வாகீசன் தன்னை விட்டு சென்றான் என அனுபமாவுக்கு தெரியவந்தால் அடுத்து நடக்க போவது என்ன?
இரு காதல் புறாக்களின் கதையே இந்த தன்னந் தனிமையிலே.
