எழுத்தாளர்: முத்துலட்சமி ராகவன்

அந்தி மழை பொழியும் நேரங்களில் சந்தித்துக் கொள்ளும் கைலாஷும் துர்காவும் மெல்ல மெல்ல பழக ஆரம்பிக்கிறார்கள். நாட்கள் செல்ல , இருவரும் காதல் வயப்பட , வாழ்கை ஆனந்தமாக செல்கிறது.
சிறு வயதில் கைலாஷுக்கு நிறைய உதவிகள் புரிந்த நண்பன் ஆதித்யனின் காதலியுடன் பேசிக்கொண்டிருக்க , துர்காவும் அந்த இடத்துக்கு வந்துவிடுகிறாள். இருவரும் பேசிக்கொண்டிருப்பதை தவறாக புரிந்துக்கொள்ளும் துர்கா கைலாஷை , விட்டு பிரிந்து சென்றுவிடுகிறாள். நாட்கள் கடந்து போகிறது.
ஒரு வயது பவித்ரனுடன் தனது மேல் அதிகாரியாக வரும் கைலாஷை கண்டு அதிரிச்சியடைகிறாள் துர்கா. சில சமயங்களில் தாயில்லாத பவித்ரனை துர்கா கவனித்துக் கொள்கிறாள். இதை அறிந்த துர்காவின் தம்பி கைலாஷிடம் சென்ற நியாயம் கேட்க , நடந்தவை அறிந்துக்கொண்டு கைலாஷையும் துர்காவையும் சேர்த்து வைக்க முயற்சி செய்கிறான்.
| உண்மையை அறியாமல் தன்னை விட்டு விலகி சென்ற துர்காவை கைலாஷ் மன்னித்து ஏற்றுக்கொள்வானா?
கைலாஷும் துர்காவும் எப்படி இணைந்தார் என்பதே அந்திமழை பொழிகிறது! |
