எழுத்தாளர்: ராஜேஷ்குமார்
தருண் ஒரு நேர்மையான ராணுவ அதிகாரி. ஆனால் இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவிட்டனர் , அதும் ராணுவத்தினரின் துணையுடன் என செய்தி மேலிடத்திற்கு வருகிறது. ராணுவத்தின் தலைமை அதிகாரிகளின் பார்வை தருணின் மீது திரும்புகிறது. வந்த தகவலின் படி அவனின் நடவடிக்கைகளை கண்காணிக்க ஆரம்பிக்கின்றனர்.

மனைவி உமாவுடன் வெளியில் சென்ற தருணை சர்த்தார்ஜி வேடத்தில் வந்த ஒருவன் தனியாக சந்திக்க அழைக்கிறான். வேலை அலுவலாக செல்லவிருப்பதாக உமாவிடம் சொல்லிட்டு கிளம்புகிறான் தருண். சர்த்தார்ஜி இந்தியாவுக்கு துரோகம் செய்ய சொல்லி அதிக தொகையைக் கொடுக்க முனைகிறான். இந்தியாவை நேசிக்கும் நேர்மையான அதிகாரி தருண். ஆத்திரமடைந்து சர்த்தார்ஜியை மடக்க முயல அவன் ஆட்கள் துணையுடன் துப்பாக்கி முனையில் தப்பி விடுகிறான்.
நடந்ததைத் தருண் தனது மேலதிகாரியிடம் சொல்ல அவர்களுக்கோ தருணின் மீது சந்தேகம் வலுப்படுகிறது. ராணுவத்தில் ஊடுருவிக்கின்ற தீவிரவாதிகளிடமிருந்து பிற அதிகாரிகளைக் காப்பாற்ற நினைக்கும் தருண் அனைத்தையும் ராணுவ அதிகாரியான நண்பன் சுனிலிடம் சொல்கிறான்.
அதே எண்ணத்தில் ராணுவ கிடங்கிக்கு செல்ல அதே நேரத்தில் ராணுவ சபிட்டி ஆபீசர்களால் சுற்றி வளைக்கப்படுகிறான். அவன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அதிகாரிகளால் விசாரணைக்கு ஆளாகிறான். தருணின் வீட்டை சோதனை போட அங்கே சில கலசங்கள் இருக்கின்றன. அதை சோதிக்கவும் சென்னையில் இறந்துபோன கதிர் கையில் தென்பட்டதுபோல் சாம்பல் நிரம்பியிருக்கிறது.
விசாரணையில் அடி தாளாமல் தருண் இறந்து போகிறான். கணவன் இறந்ததை எண்ணி கதறிய அழுகிறாள் உமா. அவளை ஆறுதல் படுத்தும் சுனில் தருணின் சாவுக்கு தான் கண்டிப்பாக நியாயம் தேடுவேன் என சூளுரைக்கிறான். அவன் சென்று விட கண்ணீரை துடைத்து கொண்டு உள்ளே வந்த உமா, உள்ளே அறையில் உல்லாசமாக படுத்திருக்கும் இருக்கும் ராணுவ தலைமை அதிகாரியை பார்த்து சிரிக்கிறாள்!
| தவறாக குற்றம் சாட்டப்பட்ட தருண் நேர்மையானவன் என தெரியவந்ததா?
இந்த சூழ்ச்சியில் உமா மற்றும் ராணுவ தலைமை அதிகாரியின் பங்கென்ன? தீவிரவாதிகளின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டதா? ராணுவ அதிகாரிகளின் போராட்டங்களை எடுத்துரைக்கிறது இந்தியா நாடு…என் வீடு! |
