எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன்
தியாகராஜனுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். ஒருத்தி உஷா மற்றொருவள் நிஷா. அக்கா உஷா அமைதியும் அடக்கமும் பயந்த சுபாவமும் கொண்டவள். நிஷாவோ துடுக்குத்தனமும் தைரியமும் கொண்டவள். மற்றவர்களுக்காக வேலை செய்து கொண்டு பிற பெண்களை போல அல்லாமல் சுதந்தரமாக வாழ நினைப்பவள்.
உஷாவைப் பெண் பார்க்க வந்த மாப்பிளை துடுக்குக்குடன் பேசும் நிஷாவைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாக சொல்லிவிடுகிறான். தியாகராஜனோ வேறு வழியில்லாமல் சரியென்று சொல்லிவிடுகிறார். அதே நேரத்தில் உஷாவுக்கு வேறு சம்பந்தத்தைத் தேட ஆரம்பிக்கிறார். நிஷாவிடமோ வெற்றி சிரிப்பு ஆனால் உஷாவோ வேதனையில் வெதும்பிப் போகிறாள். நிஷாவும் அவளைப் பட்டிக்காடுப்ப்போல் இருப்பதனால்தான் மாப்பிளை உன்னை வேண்டாமென்று என்னைத் தீர்வு செய்தார் என கேலி பேசுகிறாள்.
வாக்குவாதம் முற்றிவிட வேதனை தாளாமல் பக்கத்துக்கு பிளாட்டில் இருக்கும் நவநீதன் மாற்றலாகி சென்றுவிட்டதால் அவர் தியாகராஜனிடம் கொடுத்துவிட்டுப் போன சாவியை எடுத்துக்கொண்டு அந்த வீட்டில் போய் தங்கிக்கொள்கிறாள்.
நவநீதனின் தந்தை நடராஜ பிள்ளை வாழ்ந்த வீடு அது. அங்கே இருந்த சமயத்திலே யோகாசனத்தில் கைதேர்ந்தவர். ஏலகிரி மலையில் மகாசமாதி அடைந்தவர். உடம் சரியில்லாத நவநீதனின் மகன் தாத்தா வந்ததாகவும் அவர்தான் தன்னைக் குணப்படுத்தியதாகவும் சொல்கிறான். அடுத்த நாளிலிருந்தே அந்த ஐந்து வயது பாலகன் நடராஜன் பிள்ளையைப் போலவே யோகாவும் தியானமும் செய்வது அந்த பிளாட்டில் காட்டுத்தீப்போல பரவ ஆரம்பித்தது. தாத்தா தான் தனக்கு சொல்லிக்கொடுத்தார் என அந்த பிள்ளைச் சொன்னது ஆச்சிரியத்தின் அடுத்த கட்டம். மகாசமாதி அடைந்தவர் எப்படி உயிருடன் வர முடியும்?
பல அதிசயங்கள் கொண்ட அந்த மர்ம வீட்டில் தங்க முதலில் உஷா பயந்தாள். ஆனால் தங்கை நிஷாவுக்கு இந்த வீடே தேவலாம் என சொல்லி தன்னைச் சமாதனப்படுத்திக்கொண்டாள். வீட்டில் ஒரு புறத்தில் மட்டும் வெளிச்சம் வரவே , எட்டிப்பார்த்தவள் அதிர்ந்துப்போனாள். பூஜை அறையாக பயன்படுத்தப்பட்டிருந்த அறையில் ஓரு அகல் விளக்கு எரிந்துக்கொண்டிருந்தது. ஆனால் அதில் எண்ணெய் இல்லை. காலியான விளக்கில் தீ சுடர் எரிவது எப்படி சாத்தியம்?
இந்த மர்ம வீட்டின் மர்மம்தான் என்ன?
