எழுத்தாளர்: லட்சுமி பிரபா
மிதிலா பத்திரிக்கையில் நிருபராக வேலை செய்பவள். தான் காதலிக்கும் சிவாவின் பார்வை தற்போது அமெரிக்காவிலிருந்து வந்த அவனது மாமன் மகள் இந்துவின் மீது படர்வதை உணர்கிறாள். மனது கவலையில் வெதும்புகிறது. இந்த நிலையில் , அவளது தோழி போன் செய்து ஒரு அதிசயமான சம்பவத்தைப் பற்றி சொல்கிறாள்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் அதாவது சுருளி மலையில் நீல விழிகள் கொண்ட நாகம்மா என்பவர் அறிய வகை மூலிகைகளைக் காத்து வருகிறார். அந்த மூலிகைகளைக் கொண்டு தீராத நோய்களையும் தீர்த்து வருகிறார். இந்த மர்மங்களைக் கண்டறிய மிதிலா நாகம்மா குகைக்குச் செல்கிறாள். அவளுடன் சிவாவும் இந்துவும் உடன் செல்கிறார்கள்.
நாகம்மாவைத் தேடி செல்கையில் , மிதிலா அந்தரத்தில் நடக்கும் சித்தரைக் காண்கிறாள். அவரிடம் நாகம்மாவைப் பற்றி கேட்க , அவரோ உன்னோடு இருக்கும் நாகம்மாவை விட்டுவிட்டு ஏன் தேடி அலைகிறாய் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். அங்கே தடுக்கி விழும் மிதிலா , மூளையின் மூலம் வைத்தியம் செய்யும் ஒரு கிழவியைக் காண்கிறாள்.
அவர் மூலிகைகளைக் கொண்டு வைத்தியம் பார்க்க , காயத்தின் எரிச்சலும் குறைகிறது. அவர்களை கோவிலின் பூசாரி வெறித்துப் பார்க்கிறார். எதேச்சையாக இந்து அதை கவனித்து விட , அவளை பார்த்து கும்பிடு போடுகிறார். பதில் வணக்கம் சொல்லிவிட்டு , இந்துவும் மற்ற இருவருடன் செல்கிறார். அப்போது அதே கிழவி நடுத்தர வயது நாகம்மவாக உருமாறுகிறார்.
மிதிலாவிற்கு நாகம்மாவின் தரிசனம் கிடைத்ததா?
ஓவ்வொரு காலகட்டத்திலும் அந்த குகையில் அடுத்த நாகம்மா தோன்றுவதாகவும் இந்த முறை அங்கே தோன்றப்போகும் அடுத்த நாகம்மா யார்?
