எழுத்தாளர்: ராஜேஷ்குமார்
பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளைச் சித்தரிக்கும் மற்றொரு thriller. கனத்த மழை நேரத்தில், நெஞ்சு வலியில் துடிக்கும் தன் தந்தையோடு கருணா மருத்துவமனை வருகிறாள் ஒரு இளம்பெண். மற்ற டாக்டர்கள் போராட்டத்தில் இருக்க, இரண்டு duty டாக்டர்களின் காமப்பார்வை இவள் மேல் படர்கிறது. அவர்கள் அப்பாவின் உயிர்க்கு விலையாக மானத்தை விலை பேச, அவளோ மறுக்க, அந்த போராட்டத்தில் உயிர் இழக்கிறாள். பிரச்சனையைத் தவிர்க்க அவள் தந்தையும் கொன்றுவிடுகின்றனர்.
ஊரிலிருந்து வரும் சாந்தமதி ரயில் நிலையத்திலிருந்து நேராக கருணா மருத்துவமனை வருகிறாள். தன் தந்தையை அதே மருத்துவமனையில் அனுமதித்திருந்த சாந்தமதி இந்த கொலைகளைப் பார்த்துவிடுகிறாள். தன் தந்தையிடம் நடந்தவற்றை கூறிவிட்டு, மருத்துவமனை வந்த அரவமே தெரியாமல் வெளியே வந்து பொதுதொலைபேசி வழியாக போலீசிடம் நடந்த கொலைகளையும், மருத்துவர்கள் பிணங்களை ஒரு கிடங்கு அறையில் மறைத்து வைத்திருப்பதையும் தெரிவிக்கிறாள்.
விரைந்து வந்த போலீசார், அந்த இரண்டு மறுத்தவர்களிடம் விசாரிக்கின்றனர். மருத்துவமனை முழுதும் தேடியும் பிணங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நடந்தவற்றை யாரோ பார்த்துவிட்டதை உணர்ந்த டாக்டர்கள், கண்டிப்பாக நோயாளிகளைப் பார்க்க வந்தவர்கள்தான் கொலைகளைப் பார்த்திருப்பார்கள் என யூகிக்கின்றனர். நோயாளிகளிடம் விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள். சாந்தமதியின் அப்பாவிடம் மறைமுகமாக விசாரிக்கும்போது, சாந்தமதி மறந்து விட்டுபோன துணிபெட்டியைப் பர்த்துவிடுகின்றனர்.
- இவர்களிடமிருந்து சாந்தமதியும் அவளின் தந்தையும் தப்பித்தார்களா?
- மறைத்துவைக்கப்பட்டிக்கும் பிணங்கள் இருக்கும் இடத்தை போலீஸ் கண்டுபிடித்ததா?
- டாக்டர்கள் குற்றவாளி கூண்டில் நிறுத்தபட்டார்களா?
நடக்கும் எதிர்பாராத திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த இரவல் சொர்க்கத்தை கண்டிப்பா படிங்க!
