சொர்ண ரேகை (Sorna Regai)

எழுத்தாளர்: இந்திர சௌந்தரராஜன்

கைரேகை சாஸ்திரம் ஆயகலை 64-கில் ஒரு அங்கம். இந்த சாஸ்திரத்தில் கைதேர்ந்தவர்கள் ஒருவரின் தலையெழுத்தையே கணித்துவிடுவார்கள். பல கோடி மதிப்பிலான தங்கங்களைத் திருடி பதுக்கிவிட்டு 17 கொலைகளைச் செய்த மரண தண்டனை கைதி முனிரத்தினத்தைப் பார்க்க Father Gabriel ஜெயிலுக்கு வருகிறார். நாளை காலை தூக்கில் தொங்கபோறவனக்கு பாவ மன்னிப்பு அளிக்க வந்தவரிடம் தங்கங்கள் இருக்கும் இடத்தை விசாரிக்க சொல்கிறார் ஜெயிலர் தனி லிங்கபெருமாள்.

அதே சமயம் ஜெயிலரைக் காண கைரேகை சாஸ்திர நிபுணன் பாஸ்கர்தாஸ் வருகிறான். தன் ஆராய்ச்சிக்காக முனிரத்னத்தின் கைரேகையைப் பார்க்க, அதில் அவனின் மரணத்திற்கான செய்தி இல்லை; அவனுக்கோ ஆயுள் கெட்டி எனவும் 90 வயதுவரை செல்வசெழிப்புடன் வாழ்வான் என கூறுகிறான். எதிர்ச்சையாக ஜெயிலரின் கைரேகையைப் பார்க்க, அவருக்கு முனிரத்தினத்துக்கு விதிக்கப்பட்ட அதே தூக்கு நாளன நாளை மரணம் சம்பவிக்கும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்வரிடம் புதிர்போடுகிறான் பாஸ்கர்தாஸ். புதிர்க்கு நாளை விடைதெரியும் என கூறிவிட்டு பாஸ்கர் சொன்னதை அலட்சியப்படுத்துகிறார் அன்வர்.

நள்ளிரவில் அன்வர் வீட்டுக்கு போன் வருகிறது. போனில் முனிரத்தினம் தப்பிவிட்டதாகவும் ஜெயிலர் சுடப்பட்டு இறந்துக்கிடப்பதாகவும் அதிர்ச்சி தகவல் வருகிறது. விசாரித்ததில் பாவ மன்னிப்பு அளிக்க வந்தது நிஜ Father Gabriel இல்லை; அவரது போர்வையில் வந்து முனிரத்தினத்திடம் துப்பாக்கியை கொடுத்தது அவன் கூட்டாளி என தெரியவருகிறது. பாஸ்கர் சொன்னது இறுதியில் பலித்துவிட்டதே என அன்வர் குழம்புகிறார்.

தப்பித்த முனிரத்தினமோ தியேட்டர் operator இராமலிங்கத்தின் வீட்டின் ஒளிந்துகொண்டு தன்னை கைது செய்து, காதலி மங்காவை அடைத்து வைத்திருக்கும் இன்ஸ்பெக்டர் அன்வரை கொல்ல திட்டமிடுகிறான். மறுபுறமோ அவனைத் தேடி போலீஸ்துறை அங்குமிங்கும் அலசுகிறது. மோப்ப நாய் இராமலிங்கத்தின் வீடுவரை வர, பதுங்கியிருக்கும் முனிரத்தினத்தைக் காணாமல் போலீஸ் இடத்தைவிட்டு நகர்கிறது.

இடையில் அக்காவைத் தேடி அவ்விடம் வருகிறான் பாஸ்கர்தாஸ். பதுங்கியிருக்கும் முனிரத்தினத்தைக் கண்டு அதிர்ச்சியடைகிறான்.

  • கைரேகை சாஸ்திரம்படி முனிரத்தினம் போலீசிடமிருந்து எப்படி தப்பித்தான்?
  • பதுக்கியிருக்கும் தங்கங்கள் வெளிக்கொண்டுவரபட்டதா? அது இறுதியில் களவாடியவனிடமே போய்ச் சேர்ந்ததா?
  • இன்ஸ்பெக்டர் அன்வரின் கதி என்னவாயிற்று? முனிரத்தினத்திடம் மாட்டிக்கொண்டிருக்கும் இராமலிங்கத்தின் குடும்பத்தின் நிலை என்ன?

புதிர்களை அவிழ்க்க , கைரேகை சாஸ்த்திரக் குறிப்புகளைத் தெரிந்துகொள்ள சொர்ண ரேகையை மிஸ் பண்ணாம படிங்க.

ps: Kavithalaya production-ல, C.J பாஸ்கர் அவர்கள் இயக்கிய மர்ம தேசம் Marmadesam: Sorna Regai இந்த நாவலை தழுவி எடுக்கபட்டதுதான். அந்த தொடரைக் காண கீழே கொடுக்கப்பட்ட button-னை click செய்யவும்.

close
LET’S KEEP IN TOUCH!

We’d love to keep you updated with the latest posts and stories😎

We don’t spam! Read our privacy policy for more info.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

EnglishTamil