எழுத்தாளர்: இந்திரா சௌந்தரராஜன்
நவரத்னா palace-ன் உரிமையாளர் தனசேகர பாண்டியனின் மனைவி கௌரிபாயின் வளைகாப்பு விழாவை படம்பிடிக்க தன் அப்பாவின் பால்ய நண்பர் இரங்கசாமியால் வரவழைக்கப்படுகிறான் பாபு. புகைப்படம் எடுக்க வந்தவனின் காமிராவில் புகை போல் ஒரு உருவம் தென்படுகிறது. அதிர்ந்து போகிறான் பாபு.
ரங்கசாமியிடம் சொல்ல. முதலில் தட்டிக்கழிக்கும் அவர், புகைப்படத்தில் அந்த உருவத்தைக் கண்டு மிரள்கிறார். Palace-ல் “என்னை காப்பாற்றுங்கள்” என்றொரு குரல் பாபுவைத் திசைதிருப்புகிறது. குரல் வந்த திசையில், முழு நிர்வாணமாக ஓர் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருகிறாள் ஒரு இளம்பெண். அந்த பெண் தனக்கு பேய் பிடிக்கவில்லை எனவும் தன்னை காப்பற்றும்படியாகவும், இல்லையேல் மந்திரவாதி போத்தி தன்னை அடித்தே கொன்றுவிடுவான் என் அலறுகிறாள்.
ரங்கசாமியோ palace-ன் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என பாபுவை எச்சரிக்கிறார். வீடு திரும்பும் பாபுவிற்கு, வாட்ச்மன் வரதன் செத்துவிட்டதாக செய்தி வருகிறது. மயானத்தில் காரியங்களை முடித்துவிட்டு வீட்டின் கதவைத் திறக்க முயலும்போதுதான் தன்னிடம் சாவி இல்லை என்பதை உணருகிறான். மயானத்தில் தான் விழுந்திருக்க வேண்டும் என யூகித்து போய் பார்த்தால், அங்கே ரங்கசாமி, மாதவன் போத்தி மற்றும் palace-ல் பார்த்த அந்த பெண், சார்மிளா!
மயான பூஜையிலிருந்த அந்த மாந்த்ரீகன், பாபு ஒளிந்திருந்து பார்ப்பதை கண்டுபிடித்து ஆத்திரமடைகிறான். தான் சாவி தொலைத்த விசயத்தைச் சொல்ல, நல்ல வேளை வீட்டு சாவியும் காலில் தட்டுப்படுகிறது. திடீரென, வாரண மையை காணவில்லை என கத்துகிறான் மாதவன் போத்தி. அது இறந்த ஆவிகளின் குரலை கேட்க உதவும் எனவும் கன்னி பெண்கள் மீது பட்டால் ரத்தம் கக்கி சாவார்கள் என எச்சரிக்கிறான்.
நடந்த திகில் சம்பவங்களை கலாரஞ்சனி பத்திரிக்கை எடிட்டர் பாலுவிடம் சொல்ல புறப்படும்போது, பாபுவின் காதுகளில் “போகாதே” என எச்சரிக்கை குரல். பிரம்மையென்று அலட்சியப்படுத்திவிட்டு செல்கிறான் பாபு. எடிட்டர் பிஸியா இருக்க, Receptionist ராஜேஸ்வரி பேச்சு கொடுக்க, அவன் சட்டையில் பட்டிருக்கும் அழுக்கைக் கவனிக்கிறான். ராஜேஸ்வரி அதை தன் கைக் குட்டையால் துடைத்துவிடுகிறாள். ஒருவழியாக எடிட்டருடன் பேசிக்கொண்டிருக்கும்போது “ராஜேஸ்வரி இறந்ததுவிட்டாள்” என்றொரு அலறல். சென்று பார்த்தால், canteen மேசைமேல் ஜீவன் பிரிந்திருக்கும் அவளின் உடல்.
அதே சமயம் palace-ல் ஏற்கனவே மூன்று முறை கரு கலைந்து கர்ப்பவதியாகவே இருக்கும் மனைவி கௌரிபாயை காண வருகிறான் தனசேகர பாண்டியன். எந்தவொரு ஆபத்துமின்றி குழந்தை பிறந்துவிடும் என அவளை ஆறுதல் படுத்திக்கொண்டிருக்கும்போது “இல்லை, அது நடக்காது, நான் விடமாட்டேன்” என்று ஆக்ரோஷமான ஒரு குரல் இருவரின் காதுகளில் இடியென இறங்குகிறது. அது சங்கரி தான் என கதறுகிறாள் கௌரிபாய்!
- ரத்னா palace-ன் மர்மம்தான் என்ன? யார் இந்த சங்கரி? காற்றாய் அலையும் அந்த ஆவியின் ஆட்டம் தொடருமா?
- சார்மிளாவிற்கு நிஜமாகவே பேய் பிடித்திருக்கிறதா? அல்லது மாதவன் போத்தியை அழைத்து வந்த ரங்கசாமியின் சதிதிட்டமா?
- இறந்தவர்களின் குரலை கேட்கும் பாபு, இந்த மர்மங்களுக்கு விடை கண்டுப்பிடித்தானா? இது ரத்னா palace ah இல்லை மர்ம palace ah?
