எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன்
கதையின் நாயகி ஹரிதா ஒரு பெண் புரட்சியாளர். “பாரதியார்” போன்று கொள்கை உடையவரை தான் திருமணம் செய்வேன் என உறுதியாக இருக்கிறாள். தங்கை சரிதாவின் தோழி மீனாவின் அண்ணன் வைகுந்தன், ஹரிதாவின் மேல் காதலில் விழுகிறான். அவனின் சித்தப்பா மகன் கண்ணனோ சரிதாவின் மேல் ஈர்க்கப்படுகிறான்.
தன் காதலுக்கு உதவி செய்ய வைகுந்தன் சரிதாவை தேடி வர, அவள் ஹரிதாவின் கொள்கைகளைப் பற்றி விவரிக்கிறாள். வைகுந்தன் கண்ணனின் மனதை சரிதாவிடம் கூறி, அவனும் ஹரிதாவும் இணையும் வழியை சொல்கிறான்.
சரிதா உண்மையிலே கண்ணனின் மீது காதல் வயப்பட, வைகுந்தனின் திட்டதிற்கு துணை போகிறாள். தங்களின் காதலுக்கு, வைகுந் தடையாக இருப்பதாக ஹரிதாவிடம் போலியாக நாடகமாடுகிறாள். ஹரிதா வைகுந்தை காண செல்ல, அவன் தான் எதிர்பார்த்ததைப் போல் இருப்பதை கண்டு காதல் வயப்படுகிறாள்.
இரண்டு ஜோடிகளின் திருமணமும் பெரியவர்களால் நிச்சயிக்கபடுகிறது. முதல் நாளில் வைகுந் + ஹரிதா திருமணமும், மறுநாளில் கண்ணன் + சரிதாவின் திருமணம் நடைபெறுகிறது. திருமணம் முடிந்து, வைகுந்தும் ஹரிதாவும், மொட்டை மாடியில் பேசிக்கொண்டிருக்கும் போது கண்ணன் அங்கு வருகிறான்.
அவனின் வரவை கண்டு, ஹரிதா இருளில் மறைந்து கொள்கிறாள். பேச்சு வாக்கில், கண்ணன் போட்ட திட்டத்தை எதேச்சையாக சொல்லிவிட, உண்மையைத் தெரிந்துக்கொண்ட ஹரிதா எரிமலை போல் வெடிக்கிறாள்!
- வைகுந், கண்ணன் மற்றும் சரிதா போட்ட திட்டம் வெளியான பிறகு நடந்தது என்ன?
- ஹரிதா தான் நினைத்தது போல் வைகுந் இல்லை என தெரிந்ததும் என்ன முடிவெடுத்தாள்?
இந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து வைகுந்தநாதன், ஹரிதா இருவரும் எவ்வாறு இணைகிறார்கள் என்பதே “கடலில் கலந்த நதி”.
