எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன்
பாண்டியன் ஒரு போலீஸ் அதிகாரி. தீவிரவாதிகளைப் பிடிக்க காட்டில் முகாம் இடுபவன். குடும்பத்தோடு பெண் பார்க்க செல்கிறான். போன இடத்தில் சாருலதாவைப் பிடித்துப்போய் விடவே திருமணத்திற்கு சம்மதிக்கிறான்.
அதீத வெட்கம் காரணமாக சாருலதாவோ பாண்டியனின் முகத்தைப் பார்க்க மறுக்கிறாள். இருவீட்டார் முன்னிலையில் பாண்டியன், சாருலதா திருமணம் நடைபெறுகிறது.
ஆனால், திருமணம் நடந்த நாளன்றே கடமை புரிய செல்ல வேண்டிய நிர்பந்தம். சாருலதாவோ கணவனின் முகத்தைப் பார்த்ததே இல்லை.
அவன் சென்ற பிறகு, திருமண வீட்டில் தகராறு எழவே, சாருலதா பிறந்த வீடு சென்றுவிடுகிறாள். 8 மாதமாக அவளைத் தொடர்புக்கொள்ள முடியாமல் தவிக்கிறான். திரும்பி வரவும், திருமண வீட்டில் நடந்த தகராறு பற்றி தெரியவர, சாருலதாவைத் தேடி வருகிறான்.
கணவனின் முகமறியாத சாருலதா, வாசலில் நின்ற பாண்டியனை “யார் நீங்கள்” என்று கேட்டுவிடுகிறாள். ஆத்திரமடைந்த பாண்டியன் அந்த இடத்தை விட்டு சென்றுவிட, சாருலதாவோ நடந்தறியாமல் குழம்பி நிற்கிறாள்!
- வந்தது தன் கணவன்தான் என அறியாமால் நிற்கும் சாருலதாவுக்கு உண்மை தெரிந்ததா?
- மனைவி தன் முகத்தைக் கூட பார்த்ததில்லை என்பதை பாண்டியன் உணர்ந்துக்கொண்டானா?
இந்த குழப்பங்களைக் கடந்து பாண்டியன் + சாருலதா எப்படி இணைந்தனர் என்பதே நிழலோடு நிழலாக!
