எழுத்தாளர்: தேவிபாலா
ஆண்டாளம்மாள் கல்யாணத்தில் ஒரு ஆட்டம் ஆடி தீர்த்துவிட்டிருந்தார். பெண்ணை பெற்ற பெருமாள் நொந்துபோனார். மறுவீட்டுக்கு பெருமாளையும் கணவனைப் பிரிந்து பிறந்த வீட்டிலிருக்கும் அவரின் மூத்த மகள் கல்பனாவை அழைக்காமல் கல்யாண பெண் சுமதியை அழைத்து சென்றுவிட்டிருந்தார் ஆண்டாள். முதலிரவில் சுமதி கணவன் சீனுவிடம் சூடாக கேள்விகளைக் கேட்க மறுநாள் அம்மாவை கேள் என சொல்லிவிட்டு தள்ளி படுத்துவிடுகிறான்.
மறுநாள் சுமதி ஆண்டாளம்மாளிடம் கேட்க கல்பனாவின் மாமியார் அன்னம்மாளைக் கோவிலில் சந்தித்ததாகவும் சுமதியின் தந்தை மற்றும் அக்காளின் தீய நடவடிக்கைகளைத் தெரிந்ததால்தான் அப்படி நடந்துகொண்டதாக சொல்கிறார். சுமதியோ அன்னம்மாள் நல்லவள் இல்லை எனவும் தன் குடும்பத்தைத் தவறாக சித்தரித்துவிட்டதாக சொல்கிறார். இதை நான் கண்டிப்பா நிரூபிப்பேன் என சூளுரைக்கிறாள்.
ஆண்டாளம்மாள் அன்னம்மாளைக் கோவிலில் சந்தித்து பேச , சுமதி சொன்னது அனைத்தும் உண்மை தெரிய வருகிறது. தன் தவறை எண்ணி உணர்ந்து குடும்பத்தோடு சுமதியின் தந்தை பெருமாளைக் காண செல்கிறார். குழந்தையைப் பிடுங்கி வைத்துக்கொண்டு , கல்பனாவைத் துரத்தி விட்ட மாமியார் அன்னம்மாளை வெல்ல நாங்கள் துணையாக இருப்போம் என ஆண்டாளம்மாள் கூறுகிறார்.
அதே வேளையில் பல தரம் குறைந்த வேலைகளில் செயல்படும் அன்னம்மாளோ மருமகளை தந்திரமாக வரவழைத்து தவறான காரியத்தில் ஈடுபடுத்த மகனுடன் சேர்ந்து திட்டம் தீட்டுகிறாள்.
அன்னம்மாள் விரித்த வலையில் கல்பனா சிக்கிக்கொள்வாளா?
படிக்க தவறாதீர்கள்… சுவாரசியமான திருப்பங்களோடு உறவுப் பந்தயம்!
