கல்யாண வலையோசை (Kalyana Valaiyosai)

எழுத்தாளர்: தேவிபாலா

பிறந்த வீட்டு புகுந்த வீட்டு என பாரபட்சம் பார்க்காமல் இரு குடும்பத்தையும் சமமாக பார்க்கிறாள் சஞ்சனா. தன்னை நம்பி இருக்கும் நோயாளி அம்மா , கணவனைப் பிரிந்து குழந்தையுடன் இருக்கும் தங்கை வந்தனா , காலேஜில் படிக்கும் மற்றொரு தங்கை சொப்னா ஒரு பக்கம். சஞ்சனா எதை செய்தலும் தவறாகவே பார்க்கும் மாமியார் மாலதி , தாழ்வுமனப்பான்மையினால் தன்னைவிட அதிகமாக சம்பாதிக்கும் மனைவியின் மேல் ஆத்திரம்கொள்ளும் குடும்ப பாரத்தை சுமக்காத கணவன் சபரீஷ் , வீட்டு பொறுப்பை பார்க்காத மாமனார் மற்றொரு பக்கம். சஞ்சனாவுக்கு ஒரே ஆதரவு அந்த வீட்டில் இருக்கும் மாமியார் மாலதியின் அம்மாவான பாட்டி மற்றும் நாத்தனார் காவ்யா.

Image by https://www.goodreads.com/

மாமனாருக்கு பென்சன் பணம் வந்தாலும் காவ்யாவின் வளைகாப்பிற்கு தங்க வளையல்கள் வாங்க வேண்டும் என சஞ்சனாவை நிர்பந்திக்கிறாள் மாலதி. அண்ணனான சபரீஷ் கண்டுகொள்ளாமல் இருக்க சஞ்சனா ஆபிசில் லோன் போட்டிருப்பதாக சொல்கிறாள். லோன் பணம் வர , அம்மா மயங்கிவிட்டார் என வந்தனாவிடமிருந்து செய்தி வருகிறது. லோன் போட்ட பணத்தில் அம்மாவின் மருத்துவமனைச் செலவை சமாளிக்கிறாள்.

விசயம் புகுந்த வீட்டில் தெரிய , அவளின் தாயின் உடல் நிலையை விசாரிக்காமல் தங்க வளையல்களுக்கு என்ன செய்ய போகிறாள் என மனசாட்சி இல்லாமல் கேட்கிறாள் மாலதி. தன் தங்க வளையல்களை விற்று காவ்யாவுக்கு புதிதாக தங்க வளையல்களை வாங்குகிறாள். இந்த வீட்டிக்கு ஏன் இவ்வளவு கஷ்டப்படவேண்டும் என பாட்டி சஞ்சனாவைக் கடிந்துக்கொள்கிறார். காவ்யாவும் தனக்கு தங்கை போல்தான் என சொல்கிறாள் சஞ்சனா

காவ்யாவின் வளைகாப்பின் போது , முக்கியமான ப்ராஜெக்ட் விசயமாக முதலாளி அவள் கண்டிப்பாக ஆபிசில் இருக்க வேண்டும் என சொல்லிவிடுகிறார். வேறு வழியில்லாமல் வீட்டில் இதை சொல்ல , அங்கோ பூகம்பம் வெடிக்கிறது. மாலதி அவளை குத்திக் காட்டி பேசி மகனையும் சஞ்சனாவுக்கு எதிராக திருப்பிவிடுகிறாள். தன் பேச்சை கேட்காமல் சென்றால் விளைவைச் சந்திக்க நேரும் என எச்சரிக்கிறான் சபரீஷ்.

வளைகாப்பு ஏற்பாடுகளை தான் செய்து விட்டதாகவும் , ஆபீஸ் சென்றே ஆகவேண்டும் என கூறிவிட்டு சஞ்சனா சென்றுவிடுகிறாள். மாலதி ஏற்றிவிட சபரிஷ் சஞ்சனாவின் ஆபீஸ் வாசலில் நிற்கிறான் அவளை வீட்டிற்கு கூட்டிவர…

சஞ்சனா மற்றும் மாலதி போன்ற பெண்களே இந்த உலகில் அதிகம். சஞ்சனா நடத்தியே வாழ்கை போராட்டமே கல்யாண வலையோசை!

close
LET’S KEEP IN TOUCH!

We’d love to keep you updated with the latest posts and stories😎

We don’t spam! Read our privacy policy for more info.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

EnglishTamil