எழுத்தாளர்: இந்திரா சௌந்தர்ராஜன்
ஸ்ரீனிவாச ஐயர் பரம்பரை பரம்பரையாக கண்ணன் விக்ரகத்தைப் பூஜித்து வருகிறார். மகன் சம்பத் வேலை காரணமாக மனைவி சாருவுடன் சென்னை சென்றுவிட, தொடர்ந்து கண்ணன் விக்ரகத்தைப் பாதுகாக்கும் விசயத்தில் நாட்டம் இல்லாமல் இருக்கிறான்.
காவிரியில் தண்ணீர் பாய்ந்திருக்கும் சமயத்தில், சம்பத் மனைவியுடன் ஊர் திரும்புகிறான். கல்யாணம் ஆகி பல வருடங்கள் உருண்டோடியும் பிள்ளை பாக்கியம் இல்லாததால் நாடி ஜோதிடரைச் சந்தித்தாக சம்பத் சொல்ல , சாருவோ அதில் தனக்கு நம்பிக்கையில்லை எனவும் பணத்தைக் கறக்க ஜோதிடர்கள் செய்யும் பொய் பித்தலாட்டம் என சாடுகிறாள்.

ஜோதிடர் என்ன கூறினார் என ஸ்ரீனிவாசன் கேட்க , பிள்ளை பேரு கிடைக்க சில சாங்கியங்கள் செய்யவேண்டும் எனவும் அதை காசியில் தான் செய்ய வேண்டும் என சொல்கிறான். மேலும் நாடி ஜோதிடர் , பரம்பரை பரம்பரையாக பாதுகாத்து வந்த கண்ணன் விக்ரகம் களவாடப்படும் என சொன்னார் கூறவும் , ஸ்ரீனிவாசன் அதிர்ச்சி அடைகிறார். சம்பத் சொன்ன அதே நேரம் , ஒரு பைத்தியம் வீட்டிற்குள் வரவும் , நேராக கண்ணன் விக்ரகம் இருந்த மேடையில் இருந்து அதை எடுத்துக் கொண்டு ஓடுகிறது.
அதிர்ந்து போன ஐயர் அந்த பைத்தியத்தின் பின்னால் ஓட , வழியில் தவறி விழுந்து சிராய்ப்பு காயத்திற்கு உள்ளாகிறார். விக்ரகத்தோடு ஆற்றில் இறங்க போன பைத்தியத்திடம் ஒரு வழியாக விக்ரத்தைக் கைப்பற்றி வீட்டிற்கு எடுத்து வருகிறான். மேலும் ஜோதிடர் கணித்து சொன்னது போல் சாருவும் காவிரி ஆற்றின் சூழலின் மாட்ட , இனியும் தாமதிக்காமல் மகனையும் மருமகளையும் காசிக்குச் சென்று பரிகாரத்தைச் செய்ய சொல்கிறார் ஸ்ரீனிவாசன். ஆனால் இதில் சற்றும் நம்பிக்கை இல்லாத சாருவோ செல்ல மறுத்துவிட , ஸ்ரீனிவாச ஐயர் தாமே மனைவி ராஜத்துடன் செல்ல புறப்படுகிறார். கண்ணன் விக்ரகத்தைப் பாதுகாக்க யாருமில்லாததால் , காசிக்கு உடன் எடுத்து செல்கிறார்.
ரயில் பிரயாணத்தில் கண்ணன் விக்ரகம் நல்லவனான நாத்திகன் கணேஷிடம் கிடைக்கிறது. ஐயர் தனக்கு பதிலாக அந்த விக்ரகத்தைப் பூஜிக்க சொல்கிறார். அவனும் பூஜிக்க , கண்ணனின் விஜயம்!
பல திருப்பங்களைக் கொண்ட கண்ணனின் விஜயத்தைக் காண படியுங்கள் “எங்கே என் கண்ணன்”. |