எழுத்தாளர்: ராஜேஷ்குமார்
தொழிலதிபர் வசுந்தரா தேவியைக் காண காஸ்மெட்டிக் நிறுவனத்தை சேர்ந்த கஜேந்திரன் காண வருகிறான். காரியதரிசி சுஜாதா அவனை உள்ளே செல்ல அனுமதிக்க அவன் வசுந்தராவிடம் தான் உண்மையில் காசுக்கு கொலை செய்யும் கூலிப்படையைச் சேர்ந்தவன் எனவும் காஸ்மெட்டிக் நிறுவனர் என பொய்யாக ஒரு விசிட்டிங் கார்டைத் தயாரித்து உள்ளே வந்ததாக சொல்கிறான். முகத்தில் வேர்வை வழிய அவன் வந்த காரணத்தைக் கேட்கிறார் வசுந்தரா.

அவர் முன்னே கிராபிக்ஸ் செய்ய பட்ட ஒரு போட்டோ நீட்ட அதில் தன்னை ரத்த வெள்ளத்தில் பார்க்கும் வசுந்தரா வெலவெலத்து போகிறார். வசுந்தராவைக் கொலை செய்யும் படி தனக்கு மர்ம குரலின் மூலம் கட்டளை வந்ததாகவும் அதைப் பற்றி முன்னெச்சரிக்கை செய்யவே வந்தாக சொல்கிறான் கஜேந்திரன். அவன் சொல்லிவிட்டு சென்றுவிட வசுந்தரா தனக்கு அறிமுகமான இன்ஸ்பெக்டர் தனவேலை அழைக்கிறார்.
இன்ஸ்பெக்டர் வரவும் அந்த தகவலை சுஜாதா மறைத்து வைத்திருக்கும் கைத்தொலைபேசியில் மூலம் ஒரு மர்ம நபருக்கு தெரிவிக்கிறாள். அந்த நபரோ அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதை மறைமுகமாக கேட்க சொல்கிறார். வானவில்லின் எட்டாவது நிறத்தை இன்னும் ஓரு வாரத்தில் கண்டுபிடித்துவிடுவேன் என சுஜாதா தனது முதலாளியிடம் உறுதியாக சொல்கிறாள்.
நடந்ததை வசுந்தரா இன்ஸ்பெக்டரிடம் தெரிவிக்கிறார். தகவல் சொன்ன கஜேந்திரனை போலீஸ் விசாரிக்க அழைத்து செல்கிறது. கொலை செய்ய சொன்ன தகவலை வசுந்தராவிடம் சொன்னது துரோகமில்லையா என ஒரு போலீஸ் கேட்கவும் இவர்கள் நிஜ போலீஸ் இல்லை என கஜேந்திரன் உணர்கிறான். சற்றும் தாமதிக்காமல் வேனிலிருந்து குதித்து ஓட போலீஸ் வேடத்திலிருக்கும் மூவரும் துரத்திக் கொண்டு பின்னே ஓடுகின்றனர்.
வசுந்தரா பாதுகாப்பாக இருக்க அவரை கெஸ்ட் ஹவுசில் தங்க சொல்லி , பாதுகாப்புக்காக இன்ஸ்பெக்டர் சித்தார்த்தனை வைக்கிறார். தன்னை யார் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என யோசித்துக் கொண்டு அறைக்குள் சென்ற வசுந்தரா விக்கித்துப் போகிறார். அங்கே பாத்டப்பில் ஒருக்களித்து படுத்திருக்கும் ஒரு உருவம். அருகே சென்று பார்த்தால் அந்த இளைஞன் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறான்.
வானவில்லின் எட்டாவது நிறத்தைப் பற்றி தெரிய நாவலை நாடுங்கள்! |
