எழுத்தாளர் : இந்தரா சௌந்தரராஜன்
சென்னையில் வசித்து வரும் டாக்டர் ராஜேந்திரன் தன் பூர்விக சொத்தை விற்க சொந்த கிரமமான மகேந்திர மங்கலத்துக்கு தன் மனைவி மகளுடன் வருகிறான். வந்த இடத்தில் அநேக அமனுஷங்கள்! ஒரு சித்தர் மண்ணை பொன்னாக்கி காட்டுகிறார். சோதித்துப் பார்த்தால் நிஜ தங்கம். இன்றைய விலைக்கு இலட்சங்களைத் தாண்டி போகும்.
உடல் நலம் சரியில்லாத டாக்டரின் மகள் ஆஷா சித்தரால் குணமாக்கப்படுகிறாள். ராஜேந்திரனின் வீட்டிலோ ஒரு பெட்டியில் சித்தர்களின் ஏடுகள் பல பாதுகாக்கப்பட்டிருக்கிறது. அதுக்கு காவலாக ஐந்து தலை நாகம். அந்த பெட்டியில் மண்ணை பொன்னாக்கும் ரசவாத குறிப்புகள் கொண்ட ஏடுகள் இருப்பதால் அதை பாதுகாக்க பதஞ்சலி சித்தர் ஐந்து தலை நாக உருவில் இருப்பதாக தெரியவருகிறது. ஏடுகளை களவாடவோ ஒரு சில கும்பல்கள்.
இடையில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் புஷ்கரம். இந்த புஷ்கரத்தின் போது அனைத்து நதிகளும் காவிரியில் வந்து கலக்கும் எனவும் புஷ்கரத்தின் போது நதியில் முங்கி எழுந்தால் தெரிந்து தெரியாமல் செய்த பாவங்களும் அழிந்துவிடும் என பரவலாக நம்பப்படுகிறது.
இதுபோதாதென்று அகோரி ஒருவன் ஊருக்குள் நுழைகிறான். கண் பார்வையாலே வசியம் செய்யும் திறமையுடையவனாக இருக்கிறான். ஊருக்குள் வந்த அகோரி ராஜேந்திரனின் வீட்டுக்கு வந்து ஏடுகள் இருக்கும் பெட்டியையும் ஆஷாவையும் கடத்திக்கொண்டு போகிறான்.
மகளைக் காணாமல் தேடி அலையும் ராஜேந்திரனுக்கு அவள் இருக்கும் இடத்தைப் பற்றி சித்தரால் தெரிய வருகிறது. அங்கு சென்று பார்த்தால், ஆஷா அம்மன் போல் அலங்கரிக்கப்பட்டிருக்க. அகோரியோ பூஜைக்கு ஆயுத்தமாகி இருந்தான். அந்த பூஜை கூடத்தின் நடுவிலோ ex-MLA!
- சுய நினைவின்றி இருக்கும் ஆஷாவின் நிலை என்னவானது?
- ஏடுகளை களவாட எத்தனிக்கும் கும்பலின் திட்டம் நிறைவேறியதா?
- இந்த கதையில் வரும் புஷ்கரத்தின் பங்குதான் என்ன?
- சித்தர்கள் செய்யும் அதிசயங்கள் உண்மையா?
சிதம்பர ரகசியங்களைத் தெரிஞ்சிக்க,இந்த கதையின் புதிர்களுக்கு விடைக் காண சிதம்பர ரகசியத்தை மறக்காம வாங்கி படிங்க.
உங்களுக்கு தெரியுமா!
சிதம்பரத்தில் இருக்கும் நடராஜரின் கால் கட்டை விரல்தான் இந்த பூமியின் மையம்.
- நான்கு புறத்திலும் 4 வாசல்கள் இல்லை. மொத்தம் 9 வாசல்கள்.
- கூரையில் 21,600 ஓடுகள்.
- அந்த ஓடுகளைப் பொருத்த 72,000 ஆணிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
- நமக்கு ஒன்பது துவாரங்கள்.
- நாம் ஒரு நாளைக்கு 21,600 தடவை மூச்சு விடுகிறோம்.
- நமக்கு 72,000 நரம்புகள்.
