எழுத்தாளர்: ராஜேஷ்குமார்
முத்துக்குமார் டிவி சீரியல்களில் நடிக்கும் நாடக நடிகன். தாயின் உடல் நலம் சரி இல்லை என தங்கையிடமிருந்து போன் வருகிறது. அவரச அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனவும் அதற்கு 25000 ரூபாய் பணம் தேவை என்பதால் செய்வதறியாமல் விழிக்கிறான் முத்துக்குமார்.
நாடகத்தின் தயாரிப்பாளர் கலியமூர்த்தியிடம் பணம் கேட்க அவரோ அவனைக் கேவலப்படுத்தி வெளியே அனுப்புகிறார். அவமானத்தால் கூனி குறுகும் முத்துக்குமாருக்கு, நண்பன் ராகவனின் நினைவு வரவே அவனை போனில் அழைக்கிறான். தற்போதய நிலைமையை ராகவனிடம் சொல்ல அவன் தன் முதலாளி அண்ணாச்சியிடம் மொத்த பணத்தையும் வாங்கிக்கொள்ள சொல்கிறான்.
முத்துக்குமாரும் வாடகை டாக்சி நிலையத்துக்குச் சென்று அண்ணாச்சியைச் சந்திக்கிறான். அப்போது தொலைபேசி சினுங்க வாடகைக்கு டாக்சி கேட்டு ஒரு முக்கிய பிரமுகரின் அழைப்பு வருகிறது. அந்த நேரத்தில் ஓட்டுனர்கள் யாரும் இல்லாததால் அண்ணாச்சி முத்துக்குமாரை ஆக்ட்டிங் டிரைவராக அந்த வாடிக்கையாளரை அழைத்து செல்ல நிர்பந்திக்கிறார். முதலில் மறுக்கும் முத்துக்குமார் பிறகு வேறு வழில்லாமல் ஒப்புக்கொள்கிறான்.
கொடுத்த முகவரியில் ஒரு பெரிய வீட்டின் முன் காரை நிறுத்துகிறான். சரண் என பெயர் கொண்ட அந்த VIP-ஐ அழைத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்கிறான். சரணும் பேச்சு கொடுக்க முத்துக்குமாரின் நிலை அவருக்கு தெரிய வருகிறது. அண்ணாச்சி பணம் கொடுக்காவிட்டாலும் தான் அந்த பணத்தைக் கொடுப்பதாக வாக்கு கொடுக்கிறார்.
ஒரு முக்கிய விசயமாக அரசாங்கத்தைச் சார்ந்த ஒரு உயர் அதிகாரியைச் சந்திக்க போவதாக கூறுகிறார். ஆள் அரவமில்லாத அந்த பிரமாண்ட மாளிகையின் முன் கார் நிற்க, சரண் தான் கொண்டுவந்த பெட்டியை எடுத்துக் கொண்டு உள்ளே செல்கிறார். அரசாங்க அதிகாரியிடம் தன் கண்டுபிடிப்பைச் சரண் விவரிக்க அந்த அரசாங்க அதிகாரியோ அதை அவரிடம் கொடுத்து விட்டு போக சொல்கிறார். சரண் மறுக்கவும் அந்த அதிகாரி தன் சுயரூபத்தைக் காட்டி சரணைத் துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார்.
அடிபட்ட காயத்துடன் சரண் ரத்த வெள்ளத்தில் டாக்சியில் வந்து விழவும் அதிர்ந்து போகிறான் முத்துக்குமார்!
முத்துக்குமார் இந்த சிவப்பு இரவிலிருந்து எப்படி தப்பித்தான்? தெரிந்துக்கொள்ள மறக்காம வாங்கி படிங்க! |
---|