
எழுத்தாளர்: லட்சுமி சுதா
கதையின் நாயகன் சசிகாந்தன், தன் அண்ணனின் வாழ்வில் நடந்த சம்பவத்தினால் அழகான பெண்களை கண்டாலே வெறுத்து ஒதுக்குகிறான். தாயை தவிக்கவிட்டு காதலியுடன் வாழும் தந்தையின் போக்கால், திருமணமே வேண்டாம் என இருக்கிறாள் நூதனா.
முதலில் அவள் நேர்மையானவள் என தெரியாமல் அவளிடம் தவறாக நடந்துக்கொள்ளும் சசி, பிறகு உண்மையை அறியவும் தான் செய்த தவற்றை உணர்கிறான். அவளிடம் தன் மனம் லயித்திருப்பதை உணர்ந்து, காதலைச் சொல்லி மணக்க கோருகிறான். நூதனா அவன் காதலை புறக்கணித்துச் செல்லவும், கோபமடைகிறான்.
நூதனவினால் மாட்டிக்கொண்ட பழைய டீலர் ஒருவன், சாட்சியாக வீடியோ ஒளிப்பதிவைக் காண்பித்து அவள் தப்பானவள் என சசியிடம் கூறுகிறான். அதை நம்பும் சசி நூதனாவிடம் கடுமையாக நடந்துக் கொள்கிறான்.
ஒரு சமயத்தில் அவளை ஆழ முற்பட, சரியான நேரத்தில் நூதனாவின் சித்தி அவனை தடுக்கிறார். நூதவைப் பற்றிய உண்மை விவரங்களை அவளின் பழைய முதலாளியிடம் கேட்க சொல்கிறார். சசி விசாரிக்க, உண்மை தெரியவும் தன் தவற்றை எண்ணி உடைந்து போகிறான்.
- உண்மையை அறிந்த பிறகு சசி என்ன முடிவெடுத்தான்?
- தன்னிடம் கடுமையாக நடந்து கொண்ட சசியை நூதனா மன்னித்து ஏற்றுக்கொண்டாளா?
இந்த மன குழப்பங்களைக் கடந்து சசிகாந்தன், நூதனா எவ்வாறு இணைந்தனர் என்பதே சோலை மலரொளியோ!
