அந்த பழங்கால கடிகாரத்தை வாட்ச் மெக்கானிக் சரி செய்துக்கொண்டிருந்தார். பழுது பார்த்துக் கொண்டிருந்தவரிடம் அந்த கடிகாரத்தின் பெண்டுலம் அவரிடம் கெஞ்சியது.
“ஐயா! தயவுசெய்து என்ன விட்ருங்க. நீங்களே நினைச்சுப்பாருங்க. நான் காலை மாலைன்னு இரண்டு வேளையும் செயல்படனும். ஒரு நிமிடத்துக்கு 60 தடவைகள் என, ஒரு மணி நேரத்துக்கு அறுபது நிமிடங்கள், ஒரு நாளைக்கு 24 மணிநேரம், வருஷத்துக்கு 365 நாட்கள் என இப்படியே ஒவ்வொரு வருஷமும் நான் ‘டிக் டிக்ன்னு’ வேலை செஞ்சுக்கிட்டே இருக்கனும். என்னால முடியல ஐயா” என சலிப்பு கலந்த குரலில் சொன்னது.
அந்த வாட்ச் மெக்கானிக் பெண்டுலத்தின் மனநிலை புரிந்தவராக “எதிர்காலத்தை நினைத்து வருந்தாதே! எப்போதும் போல் ஒரு நொடிக்கு ஒரு முறை டிக் என செயல்படு. பிறகு ஒவ்வொரு நொடிகளும் நகரும்போது நீ மகிழ்ச்சியாக உணர்வாய்!” என அறிவுரை சொன்னார்.
அவர் சொன்னதிலிருந்த உண்மையை உணர்ந்து, அதன் பிறகு பெண்டுலம் உற்சாகமாக மீண்டும் டிக் டிக் என செயல்பட ஆரம்பித்தது.
|
#சிந்தனை துளி
|
