பார்த்த முதல் நாளில்…( Paartha Muthal Naalil…)

எழுத்தாளர்: காஞ்சனா ஜெயதிலகர்

சுவாதி தாயாருடன் இங்கிலாந்தில் உணவு விடுதி நடத்திவருகிறாள். தந்தை இல்லாதிருக்க தாயாரும் இறந்துவிட , ஆதரவின்றி தனியாக இருக்கிறாள். இந்த நிலையில் தாயார் சொன்னதுபோல , இந்தியாவுக்கு செல்ல முடிவெடுக்கிறாள். ஆனால் தெரிந்தவர்கள் யாரும் இன்றி தனியே இந்திய செல்வது ஆபத்தாக முடியலாம் என உணருகிறாள்.

இந்தியாவில் பூர்விக சொத்தான வீட்டைக் காண செல்ல துணையுடன் செல்வது நல்லது என இங்கிலாந்ததில் இருக்கும் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். தோழி சொன்னபடியே திவாகரைச் சந்திக்கிறாள். ஆனால் அவனைப் பார்த்த மாத்திரத்திலே அவளுக்கு பிடிக்காமல் போய்விடுகிறது. அவனின் உயரும் தென்வட்டான பார்வையும் அவளுக்குள் எரிச்சலை மூட்டுகிறது.

ஆனால் அவளைப் பார்த்தவுடன் மயங்கும் திவாகரோ தெனாவட்டாக தெரியும்படி நடிக்கிறான். உண்மை அறியாதே சுவாதி அவனை வெறுக்கிறாள். வேறு வழியில்லாமல் அவனுடன் இந்தியாவுக்கு புறப்படுகிறாள் சுவாதி.

திவாகர் அவளுக்கு எல்லா வகையிலும் உதவி புரிகிறான். அவள் கூடவே துணையாக அவளின் சொந்த கிராமத்திற்குச் செல்கிறான். அங்கு சுவாதிக்கு ஏற்படும் சங்கடங்களைக் களைந்து உறுதுணையாக இருக்கிறான்.

திவாகரின் மனதைப் புரிந்துகொண்டு சுவாதி அவனுடன் இணைவாளா என்பதே பார்த்த முதல் நாளில்…!

close
LET’S KEEP IN TOUCH!

We’d love to keep you updated with the latest posts and stories😎

We don’t spam! Read our privacy policy for more info.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

EnglishTamil