எழுத்தாளர்: ராஜேஷ்குமார் (Rajeshkumar)
தன் அலுவகத்தின் உயர் அதிகாரி தேவாம்சம் தங்கிருக்கும் ஹோட்டல் அறைக்கு வருகிறான் பிரேம். அவர் ஊரில் இருக்கும் 10 நாளைக்கும் அவருக்கு துணையாக அலுவலக காரியங்களைக் கவனிக்க அமர்த்தப்படுகிறான். தேவாம்சமோ உல்லாச பேர்விழி. அவரை சந்தோசப்படுத்துவதற்காக மாதுரி என்கிற பெண் ஹோட்டல் ஊழியனால் வரவழைக்கப்படுகிறாள்.
அந்த பெண்ணின் விவரங்களோ பிரேமின் மனைவி மாதுரியை ஒத்திருக்கிறது. இருவரின் பெயரும் மாதுரி. பிரேமால் தேவாம்சமிடம் காட்டப்பட்ட பெண்ணின் புகைப்படத்தைக் காணமுடியவில்லை. ஒரு வேளை அந்த பெண் தன் மனைவியாக இருக்குமோ இல்லை வேறுயாரோ என குழம்பிப்போகிறான் பிரேம்.
வருகிற பெண்ணை நேரடியாக பார்த்துவிடலாம் என்று முடிவெடுக்கிறான். காத்திருந்த அவன், ஹோட்டல் வரண்டாவில் auto-விலிருந்து இறங்கும் தன் மனைவி மாதுரியைக்கண்டு கொதித்தெழுகிறான். மனைவி தனக்கு இழைத்தத் துரோகத்தைத் தாங்கமுடியலாமல் ஆத்திரத்தில் அவளைக் கொன்றுவிடுகிறான். போலீசிடம் புகார் அளிக்கப்பட, விசாரணைத் துவங்குகிறது. மின்சாரம் கம்பியில் பட்டு முகம் கருகியதால் இறந்த பெண்ணின் முக அடையாளம் தெரிந்துக்கொள்ள சிரமம் ஏற்படுகிறது.
பிரேமோ துப்பறிவாளனான நண்பன் மாமல்லனிடம் நடந்தவற்றைக் கூறி இந்த பிரச்சனையிலிருந்து விடுபட ஆலோசனை நாடுகிறான். இடையில் இறந்த பெண் ஹோட்டல் ஊழியனுக்கு தெரிந்தவள் என போலிசுக்குத் தெரியவருகிறது. இந்த சமயத்தில் பிரேமின் வீட்டின் முன் ஒரு auto வந்து நிற்கிறது. அதிலிருந்து இறங்கி வருவது அவன் மனைவி மாதுரி!!!
- அப்படியானால் இறந்த அந்த பெண் யார்?
- Auto-விலிருந்து இறங்கி வரும் இந்த பெண் யார்? இவர்களில் யார் உண்மையான மாதுரி?
- போலீஸ் கொலை குற்றவாளியைக் கண்டுப்பிடித்தார்களா? அப்போ பிரேம் பிடிபட்டனா?
- குழப்பத்திற்கான பதில் கேட்டு கதவைத் தட்டியபோது அந்தக்கதவு திறந்ததா?
இந்த புதிர்களுக்கு பதில் “Thirakatha Kadavugal” புத்தகத்தில்!
